சென்னை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வக்ஃப் திருத்த சட்டம் குறித்த மாபெரும் கருத்தரங்கம்…….
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் “வக்ஃப் சட்ட திருத்த மசோதா – 2024 – ஆலோசனைகளும் – ஆட்சேபனைகளும்” எனும் தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் மாபெரும் கருத்தரங்கம் இன்று (27-09-2024) மாலை நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் Ex MP அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் Ex MLA அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரகுமான் கான் Ex MP, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா MP, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக்குட்டி MLA, தேசிய அமைப்பு செயலாளர் முகம்மது பஷீர் MP, ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலானா மௌலவி காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத், அப்துஸ் ஸமது சமதானி MP, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் MP, மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex MP, துணை தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான நவாஸ்கனி MP, தேசிய செயலாளர் அப்துல் பாசித் Ex MLA, தேசிய மகளிரணி தலைவர் பாத்திமா முசப்பர் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
மாநில பொருளாளர் ஷாஜஹான் நன்றியுரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.