கவிச்சித்தன் மறைந்தானா ?
“””””””””””””””””””””””””””””””””‘”
பாப்பா பாட்டு தொடங்கி
பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி
பாடிய பாடல்கள் ஏராளம்.
பாரதி பாடிய பாடல்களில்
பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்
எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர
நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்
ஆனந்த சுதந்திரம் அடைந்ததாக
ஆடிப்பாடி கொண்டாட சொன்னவன்.
உச்சி மீது வானம் இடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை என்ற அஞ்சாநெஞ்சன்.
ஆங்கிலேயரிடம் அச்சத்தை விதைத்தவன்.
பாரதியின் பாடல்களை கேட்ட
மக்கள் மனதில் சுதந்திர
உணர்ச்சியை தீயாய் மூட்டியவன்.
ஓடும் நதிகளை இணைக்கனும்.
நதிகள் அனைத்தும் பொதுவாகனும்.
சமத்துவம் காண திட்டம் தந்தவன்.
வ.உ.சி. சிவா என்ற போராளிகளை
உடன் பிறப்பாய் கருதியவன்.
உலகமகா கவிச்சித்தன் பாரதி
உயிரினும் மேலான நாடு சுதந்திரம்
அடைய மக்களை திரட்டிய தளபதி,
இமைப்பொழுதும் சோர்வறியாதவன்.
கவிச்சித்தன்
மகாகவி பாரதியார்
கண்ணயர்ந்த வேளை காலன்
களிறாய் வந்து உயிரை பறித்தானா ?
தஞ்சை.ந..இராமதாசு
11.09.2024