சமத்துவ சகோதரத்துவ ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
—————————————-
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது எங்கள் கீழச்சிறுபோது கிராமம்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு இறை நம்பிக்கை கொண்ட மக்களை உள்ளடக்கியது எங்கள் கிராமம்.
இரு இறை நம்பிக்கை கொண்டாலும் ஒரு தாய் பிள்ளைகள் போல உறவுமுறை கொண்டாடி வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஜெய்சங்கர்
கவுன்சிலர் திரு செய்யது அலி.
எங்கள் ஊரில்
பள்ளிவாசலும் உண்டு
பக்தி மெச்சும்
கோவில்களும் உண்டு
தீபாவளி கறிக்கு எங்கள் ஆடுகளை அஸ்ரத் தான் அறுப்பார். இதனால் எங்கள் கறி அவர்கள் வீடு செல்லும்.
ரம்ஜான் பிரியாணி எங்கள் வீட்டில் மணக்கும்
ரம்ஜான் மாதம் முழுவதும் பள்ளிவாசல் நோன்பு கஞ்சிதான் எங்கள் மாலை சிற்றுண்டி.
இந்த வருட ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வழக்கம் போல எங்கள் கண்ணன் ஆலயத்தில் நடந்தது. அது சமயம் அண்ணன்கள் மீரா சலீம், செய்யது அலி, செய்யது கனி, அத்தா சீனி முமது ஆகியோர் கீழச்சிறுபோது முஸ்லீம் ஜமாத்தின் சார்பாக சாமி பூஜைக்கான மாலைகளை வழங்கினர்.
மாலைகளை சாமிக்கு சாத்தியபோது
மதங்கள் மறைந்து மனிதம் மிளிர்ந்தது
ஒளிர்ந்தது
அந்த ஒளியில் எங்கள்
கீழச்சிறுபோது
கிராம மக்களின்
சமத்துவம்
சகோதரத்துவம்
பிரகாசித்தது
முனைவர்
பா திருநாகலிங்க பாண்டியன்
செவிலிய ஆசிரியர்
கீழச்சிறுபோது