நெஞ்சின் நினைவுகளே துயிலெழுங்கள்
நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள்
அமைதி எனும் ஒற்றை வார்த்தை
அதனை தேடி என்னிடம் கொண்டு வாருங்கள் –
(இதோ இனி என் நெஞ்சம்)
வீட்டின் வாசலை கடந்தேன்
வட்டிக் கும்பலால் குழப்பம்
வெளியேறினேன் சாதிக் கலவரம்
வெளியூர்களில் மதக்கலவரமாம்
தலைவனின் சிலையும்
இறைவனின் ஆலயமும்
உடைக்கப் பட்டதால்
உயிர்க் குஉட்டங்கள் மரணம்
நாட்டினைத் தாண்டி
எல்லைக் கோட்டில் இளைப்பாரலாம்
என்றால் அங்கே பீரங்கிச் சத்தம்
எல்லைக் கோடிட்டவர்கள் சில
தொல்லைக் கோடுகளையும் இட்டுவிட்டனராம்
தேசங்களைத் தாண்டினேன்
அமைதி எனும் முஉன்றெழுத்தை
எப்படியாவது கண்டெடுத்திட வேண்டி
தூர தேசங்களை தேடினேன்
பாகிஸ்தானின் புலர் பொழுது
அமைதி என்று விலாசம் கேட்டேன்
விடி பொழுது இது அடையும் முன்
விழப்போகும் உயிர்களை எல்லாம்
எண்ணித் தொடர்ந்திட வியலாதாம்
-ஐயகோ…இ
ஈராக் தேசம்
பாரசீக பாலை
நடுநிசி வேளை
நடுக்கும் குளிர்
நெஞ்சங்களில் பல
நெருப்புகளாலும் மீதமுள்ளவை
வெறுப்புகளாலும்
வெந்து கொண்டுள்ளது
-ஐயகோ…இ
ஆப்கானிஸ்தானம்
அந்தி வேளை
ஆகாயம் இப்பொழுது
பறவைகளை விட
இராக்கெட்டுகளை தான்
ஆதிகம் காணுகின்றது
பாதிக் கொலைகள் தாலிபான் பெயரில்
மீதிக் கொலைகள் சந்தேகத்தின் பேரில்
-ஐயகோ…இ
கம்பனின் கற்பனையில் தோன்றிய
இராவணனின் இலங்கை – நடுப்பகல்
இறந்தகாலம் புலிகளின் பேரில்
இப்பொழுதோ உள்நாட்டு தமிழகதிகள்
அமைதி அது அதிக தூரம்
-ஐயகோ…இ
பாலஸ்தீன மாலை மையல் வேளை
மண் காக்கும் மரணப் போராட்டம்
ய+தர்களின் பீரங்கிகள் மற்றும்
பாலஸ்தீனர்களால் எறியப்படும் கற்கள்
இவையிரண்டின் சப்தங்கள்தான்
மாண்டோரை புதைக்கச் செல்வோர்
மாண்டே தானும் போகின்றனர்
-ஐயகோ…இ
சோமாலிய பஞ்ச தேசம்
பஞ்சம் நெஞ்சம் வதைக்க
கொலைகாரர்களும் குஉடி வதைக்க
பாதி ஆயுதக் கொலைகள்
மீதி பட்டினிச் சாவுகள்
-ஐயகோ…இ
சூடான் இன்று
அரசியல் காரணமாய்
சிற்சில கலவரங்கள்
எண்ணெய் தேசமல்லவா
எழுதி முடியாது காரணங்களை
அமைதி …இ அமைதி …இ குஉவினேன்
யாரும் பதில் தரவில்லை
-ஐயகோ…இ
அமெரிக்கா வல்லரசு
இரவின் அமைதியற்ற உறக்கம்
பாதித் தூக்கம் பகைவராலும்
மீதித் தூக்கம் அடங்காத இளைஞர்களாலும்
கெட்டுக் கிடக்கின்றது
அமைதியே நீ கிட்டக் கனியா?
இல்லை எட்டா ……. கனியா?
சீனம் இன்று
ப+கம்பத்தால் புதைந்தவர்களை
உயிருடனோ பிணமாகவோ
தேடிக் கொண்டிருக்கிறது
-ஐயகோ…இ
உலக மனிதர்களால்
இதயம் கருகிப்போன
பூமிப் ப+கோளம்
நெஞ்சம் வெடிக்க
இருமித் தீர்த்ததினால்
சுpல ‘லார்வா’ க்களின் புகைகள்
வான் நோக்கி உயர்ந்திட
ஐரோப்பா எங்கும்
இருட்டுப் புகை மண்டலம்
-ஐயகோ…இ
எனது நெஞ்சம் பாதுகாப்பு தேடி
என்னிடமே திரும்பி வந்துவிட்டது
அமைதியா உலகிலா அது இப்போழ்து இல்லை
என்று முஉச்சிரைத்து குஉறி நின்றது.
உலக அமைதி கானல் நீரா
கண்கள் நீரால் பனித்தன
மனிதா நீ மாறமாட்டாயா?
உன் கரியமிலங்கள் ப+மியின்
ப+க்களைக் குஉட பிழைக்க விடவில்லையே
உதிரங்கள் உதிர்கின்றனவே
-ஐயோ
வனங்கள் எல்லாம்
வனாந்தரங்களானதுவே
பறவைகளும் பட்டாம்ப+ச்சிகளும்
காற்றின் மாசுக்களால்
கலங்கி நிற்கின்றனவே
கடலின் நீரும்
கலங்கிப் போனதுவே
-ஐயோ
விலங்கினங்கள் வேறுலகம்
வேண்டுகின்றனவே…இ
சுவாசப் பைகளும் சிறுநீரகங்களும்
இதயங்களும்இ இமைகளும் குஉட
விருப்ப ஓய்வு கேட்டு
விண்ணப்பம் செய்கின்றனவே
-ஐயோ
ஓசோன் குஉரையின் ஓட்டை பெருகி
ஓட்டையில் உலகமே தெரிகிறதே
நாளைச் சமுதாயத்திற்கு
நல்ல சொத்துக்களை நீ
நிறையவே சேர்த்துள்ளாய் மனிதா
நாளைய சமுதாயம் அது
நாடுபோற்ற வாழும்! வாழ்த்தும்!!
முதுவை சல்மான்