கல்வி

இலக்கியம் கவிதைகள் (All) விருதை மு. செய்யது உசேன்

கல்வியானது மேன்மையானது,
கல்வியானது உன்னதமானது…
கல்வியானது  மேன்மையானது

கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே
கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே
தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே
கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே
                              [கல்வியானது]
கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார்,
கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார்
செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி செல்வமே,
மற்றதெல்லாம் அற்ற குளத்தில் அரு நீர் போலே!
                               [கல்வியானது]
கற்றவர்கள் உயிரின் உயர்ந்த ஜீவன்கள் தானே,
கல்லாதார் இருந்தும் இல்லா  இறந்தவர் தானே,
கற்றதனால் குருடருமே கண்ணுடையோரே
கல்லாதார் கண்ணிருந்தும் கபோதிகள் தானே!
                                 [கல்வியானது]
கற்றதுவும் கையளவு ஆகும் கல்வியே
கல்லாதது கடளவு கற்க வேண்டுமே,
தண்ணீரை அருந்தி விட்டால் தாகம் தனியுமே
கல்வி அதை கற்க கற்க தாகம் கூடுமே
                                  [கல்வியானது]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *