“மூன்று பாகங்கள்” – குறித்த
ஓர் அறிமுக ஆய்வு !
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் பேரியக்கம் என பெருமைப்படத்தக்க முஸ்லிம் லீகின் நூற்றாண்டு கால வரலாறு தொகுக்கப்பட்டு மூன்று பாகங்களாக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையினரால் மிகச் சிறந்த முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
‘வரலாறு அதை எழுதுகிறவர்களின் நோக்கத்தைப் பொறுத்தே அமைகிறது’ என்பார்கள் ! அந்த வகையில் “முஸ்லிம் லீகின் நடமாடும் ‘வரலாற்றுக் கூடம்’ என சிறப்பிக்கப்படும் எழுத்தரசு. ஏ.எம். ஹனீப் அவர்களால் இந்த மூன்று பாகங்களும் தொகுக்கப்பட்டு முஸ்லிம் லீகின் நூற்றாண்டு வரலாறு நிறைவுப்பெற செய்யப்பட்டுள்ளது.
’இந்தியாவின் முஸ்லிம் லீக் வரலாறு’ என்பது இருபெரும் பகுதிகளை கொண்டது.
1906 – தொடங்கி 1947 சுதந்திரம் வரைக்கும் உள்ள வரலாறு அகில இந்திய முஸ்லிம் லீகின் வரலாறு ஆகும்.
அகில இந்திய முஸ்லிம் லீக் இருந்ததும் வளர்ந்ததும் – போராடியதும் முழுமையான இந்தியாவில் அந்த முழுமை பெற்ற இந்தியா சுதந்திர போராட்டத்தில் இரு கூறாகப் பிரிந்தது. அன்றைய இந்தியா இன்றைக்கு ‘இந்தியா’ ‘பாகிஸ்தான்’ ‘பங்காள தேசம்’ என்று பரிணாமம் பெற்றிருக்கிறது.
‘முஸ்லிம் லீகின் தொடர்ச்சி பாகிஸ்தானில் கொஞ்சம் இருக்கிறது? பங்காள தேசத்தில் முஸ்லிம் லீக் என்ற பெயர் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற திருத்தம் செய்யப்பட்ட பெயருடன் 1948 மார்ச் 10 முதல் 64 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது.
அந்த வகையில் இந்திய அரசியல் – சமுதாய முஸ்லிம்களின் 164 ஆண்டு கால அரசியல் – சமுதாய வரலாற்று சம்பவங்களை இந்த மூன்று பாகங்களிலும் இருந்து தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
‘இந்த மூன்று பாகங்களின் மூலம் முஸ்லிம் லீகின் முழு வரலாறும் சொல்லப்பட்டு விட்டது; வரலாறு முழுமை அடைந்து விட்டது இனி சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது’. என எவரும் நினைத்து விட வேண்டியதில்லை.
சொல்லாமல் விட்ட செய்திகளும் – சொல்லப்பட வேண்டியது – அவசியம் சொல்லியே ஆக வேண்டிய செய்திகளையும் நிரம்ப கொண்ட இயக்கமாக முஸ்லிம் லீக் பேரியக்கம் பரிணாமம் கொண்டுள்ளது.
அந்த வகையில் இளம் தலைமுறையினர் முஸ்லிம் லீக் மூத்த வரலாற்று ஆய்வாளர் ஏ.எம். ஹனீப் அவர்கள் அடியொற்றி வரலாற்றின் தொடர்ச்சியை தொகுக்கும் பணியினை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மூன்று பாகங்களையும் படித்து பாதுகாப்பதோடு, இதை பரப்பவும் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது.
முதல் பாகம் விலை ரூ. 125 /-
இரண்டாம் பாகம் விலை ரூ. 150 /-
மூன்றாம் பாகம் விலை ரூ. 200 /-
கிடைக்குமிடம் :
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தலைமையகம்
காயிதே மில்லம் மன்ஸில்
36, மரைக்காயர் லெப்பைத் தெரு
சென்னை – 600001.
மதிப்புரை வழங்கியவர் -’எம்ஜிஆர்.டிவி’ அப்துல் ஹமீது
நன்றி : பச்சை ரோஜா – நவம்பர் 2012 மாத இதழ்