புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
—————————— —————————— —
இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா,
இஸ்மாயில் நபி, இவர்களின்,
நிகழ்வுகளே நினைவுகளாய்,
ஹஜ்ஜின் கடமைகளாய்,
ஹஜ் பெருனாளாய்
உலகம் எங்கும்,
கொண்டாடும்
திருநாள்
=======
இறைவனின் ஆணை,
கனவை நனவாக்கினார்
தியாக நபி இபுராஹிம்
அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை,
பாலை தனில் விட்டுச் சென்றார்
எங்கும் கொடும் வெப்பம்,
அக்னியை சுமந்த அனல் காற்று,
தனலை தாங்கிய குன்றுகள்,
தங்கிட குடிலில்லை,
இளைப்பாற கூடாரமில்லை,
தனிமை சூளலால் படபடப்பு,
யாருமற்ற வெருமையின் தகிப்பு,
கொண்டு வந்த உணவும் முடிந்து,
தண்ணீரும் முடிந்தது-ஆனால்
கவலையோ முடியாது தொடர்ந்தது,
இனி என்ன செய்ய போகிறோம்,
சிந்தனையோ பயத்தை மட்டும்,
பரிசாய் தந்து பயமுறித்தன,
அரவணைத்ததோ சூரிய ஒளி,
வெளியேறியதோ வியர்வை துளி,
உயிர் போகின்ற பசி,தாகம்,
நீர் நிலை தேடியே தாக்கம்,
காய்ந்து வெடித்தன தேகம்,
எங்காவது ஜனசஞ்சாரம் தெரிகிறதா,
வியாபார கூட்டங்கள் வருகிறதா,
எதிர் பார்த்து, எதிர் பார்த்து,
விழிகள் விரிந்து பூத்தன,
உள்ளம் உதிர்ந்து சுருங்கியது
பூந்தளிர் இஸ்மாயில் நபியை
கைகள்தான் சுமந்தன-ஆனால்
மனமோ கனமாய் கனத்தது,
மகனை மணலில் கிடத்தினார்,
தண்ணீரைத் தேடி நாவின் வரட்சி
எத்திசையும் நோக்கி பரிதவிப்பு,
கண்களால் தேடிய கழுகு பார்வை,
தூரத்திலோ கானல் நீரின் காட்சி,
தண்ணீராய் நினைத்து மகிழ்ச்சி,
உள்ளத்தில் வந்த புத்துணர்சி,
அருகில் சென்றதும் ஏமாற்ற அயர்ச்சி
சவா, மர்வா,இரு மலைகளுக்கிடையில்,
அங்கும் இங்குமாய் தொங்கோட்டம்
துவண்டு, துயரத்தால் அதிர்ந்து,
துக்கமோ அலையென பொங்கி,
அழுகையும் பொங்கியெழுந்தன,
இறைவனின் கருணையும் பொங்கியது,
பிஞ்சுவின் பஞ்சு பாதங்கள்,
மணலை தட்டி, உதைத்தன,-தன்
அமுத வாயில் அழுகை பீரிட்டுவர,
பாத அடியில் நீருற்றும் பீரிட்டன,
மகனின் நிலை காண வந்தவரோ,
தண்ணீரைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி,
மெய்சிலிர்த்திட்ட சந்தோஷத்தால்
தாகம் தணிய அள்ளி பருகினார்,
பச்சிளபாலகன் தாகமும் தனிந்தன,
தண்ணீரோ பெருக்கெடுத்து பரவியது,
சுற்றிலும் பாத்திக் கட்டி தடுத்தார்,
அதற்குமேலும் நிறைந்தோடியது,
முன்போ இல்லாமையால் தவிப்பு
பின்போ போதும், போதுமென்ற தவிப்பு
இறைவனின் விந்தை தந்த வியப்பு,
ஜம், ஜம், என்று சொல்லே தடுப்பு,-அன்று
இவ்வார்த்தை உதிர்ந்திடா விட்டால்,
உலகமெங்கும் ஓடியிருக்கும் நண்ணீர்,
நூஹு நபி கால பிரளயமோ,
முஃமின்களை பிரித்து காப்பாற்றியது,
மூஸா காலத்தில் எழுந்த நீருற்றுகளோ,
அதன் சமுகம் அறிந்து வளம் பெற்றது,
இந்நீர் ஊற்றோ தீனோர் யாவருக்கும்,
அல்லாஹ்வின் கட்டுப் பாட்டால்,
அன்ணை ஹாஜரா தட்டுப் பாட்டால்,
ஓடிய ஊற்றோ ஓரிடமாய் தங்கியது,
நீர்நிலைக் கண்டு பறவைகள் கூடின,
மக்களும் கூடி தங்கிட ஆரம்பித்தனர்,
விடப்பட்டவர்கள் என்னவானார்களோ,
என்றென்னி வந்தார் நபி இப்ராஹிம்,
துணைவியோடு மகனையும் கண்டார்,
காலங்கள் சென்றது, கனவது கண்டார்,
நபிமார்கள் கனவோ வஹியாய் வரவு,
தியாகத்தின் உச்சமாய் இஸ்மாயிலை,
பலியிடவே அழைத்துச் சென்றார்,
கல்லை இரு துண்டாக்கிய கூர்வாள்,
கழுத்தை துண்டாக்க மறுத்தன,
வேண்டுவதோ நரபழி அல்ல,
இறைவனின் சோதனையில்,
தியாகத்தால் வெற்றிப் பெற்றார்,
உலகம் உள்ளலவும் இத்தியாகம்,
ஹஜ் கடமைகளாய் நிறைவேறும்!
விருதை மு.செய்யது உசேன்