அன்பு

இலக்கியம் கவிதைகள் (All) காரைக்குடி பாத்திமா ஹமீது

 

அடைக்கும்தாழ் தேடுகிறேன்

அழிவில்லா அன்பிற்கு !

மடைதிறந்ததுபோல் வரும்

அன்பிற்கு தடுக்கும்

சுவர் தேடுகிறேன் !

 

எல்லாம் வல்ல இறைவன்

மேல்கொண்ட அன்பு

இப்பூவுலகை விட்டு

நீங்கிய பின்பும் !

 

பெற்றோரிடம் கொண்ட

அன்பு பிறந்தது முதல்,

உடன்பிறந்தோரிடம் கொண்ட

அன்பு உயிர்த்தெழுந்தது முதல் !

 

சிநேகிதிகளிடம் கொண்ட

அன்பு சேர்ந்து

படித்தநாள் முதல் !

 

கணவரிடம் கொண்ட

அன்பு காதலால்

கைபிடித்த நாள் முதல் !

 

பிள்ளைகளிடம் கொண்ட

அன்பு பாதுகாப்பாய்

பெற்றெடுத்த நாள் முதலாய் !

 

இவையனைத்தும் நான் கொண்ட

அன்பு மற்றவர்கள் மேல் !

அனைவரும் என்மேல்

கொண்ட அன்பை எப்பொழுதும்

நான் மறவேன் !

 

ஞாபகங்கள் மறைந்த நிலையிலும்

என்முகம் கண்டவுடன் ‘ஃபாத்திமா’

என்றழைக்கும் ஐந்தாம் வகுப்பு

தலைமை ஆசிரியை என்மேல்

கொண்ட அன்பை மறவேன் !

 

பத்தாம் வகுப்பிலோ முதலிடம்

என்றடவுடன் நானடைந்த

இன்பத்தைவிட தானடைந்ததாக

எண்ணிய என் தமிழாசிரியையின்

பாச அன்பை நான் மறவேன் !

 

கல்யாணமெனும் பிரிவுவந்து

கல்லூரித் தோழிகளிடம் விடைபெற்றபோது

கண்ணீரால் என் தோள்களை

நனைத்த பைங்கிளிகளின்

பாசத்தை நான் மறவேன் !

 

அமீரகத்தின் அரபு ராஜ்ஜியத்தில்

தனித்துநின்ற என் குடும்பத்திற்காக

ஈழத்திலிருந்து இணைந்துகொண்ட

சங்கமக் குடும்பத்தினர் எங்கள் மேல் கொண்ட

தனிப்பெரும் அன்பை நான் மறவேன் !

 

கடலலைகள் வற்றினாலும்

வானலைகள் வற்றாமல்

வளர்தமிழாக உருவெடுத்து

என் கவிக்கு என் பெற்றோரையும்

சிறப்பித்த தமிழ்த்தேரின்

தாளாத அன்பை நான் மறவேன் !

 

இனித் தேவையில்லை அடைக்கும் தாழ்

தடைபோட வேண்டாம் தடுக்கும் சுவர்கள்

நீண்டு செல்லட்டும் என் அன்பின் பாதை !

 

இணைந்திருக்கட்டும் அத்தனை நல்லவர்களும்

நிலைத்திருக்கட்டும் உண்மையான

அன்பு மட்டும் !

 

காரைக்குடி பாத்திமா ஹமீத்

ஷார்ஜா

 

நன்றி :

தமிழ்த்தேர்

ஆனி மாத இதழ்

ஜுலை 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *