கல்லாய் இருந்த மனிதனை
உயிர்சிலையாய் மாற்றியது கல்வி !
மரமாய் இருந்த மனிதனை
உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !
மண்ணாய் இருந்த மனிதனை
மாணிக்கமாய் மாற்றியது கல்வி !
மலையாய் இருந்த மனிதனை
மரகதமாய் மாற்றியது கல்வி !
காடாய் இருந்த மனிதனை
கலை ஓவியமாய் மாற்றியது கல்வி !
பாலையாய் இருந்த மனிதனை
சோலைவனமாய் மாற்றியது கல்வி !
பட்டுப்போய் இருந்த மனிதனை
பசுமையாய் மாற்றியது கல்வி !
சேற்று மண்ணாய் இருந்த மனிதனை
சிறந்த வளமாய் மாற்றியது கல்வி !
கல்வியென்ற ஒன்றில்லா விட்டால்
விலங்கிற்கும் நமக்கும்
வித்தியாசம் என்ற ஒன்று இருந்திருக்குமா?
அறிவுதனைப் பெற்ற நமக்கு
பகுத்தறிவு ஒன்று கிடைத்திருக்குமா?
இறைவன்தந்த அருட் கொடைகளில்
ஏற்றமிகு கல்வியை நாம்
என்றென்றும் கற்றிடுவோம்.
அரியதொரு கல்வியை
விரும்பிநாம் பெற்றிடுவோம்,
அவனியெல்லாம் சிறப்பான
வாழ்க்கைதனை அடைந்திடுவோம் !
எண்ணிலும் எழுத்திலும்
இறைவனைக் காணலாம்,
கணக்கிலும் கலையிலும்
கடவுளைக் காணலாம் !
உருவமில்லா சக்தியை
உயர்வாகக் கண்டிட
ஏற்றமிகு கல்வியை
நாமும் கற்போம்
நம்மைச் சார்ந்தோரையும்
கற்கச் செய்வோம் !
-என்றென்றும் அன்புடன்
காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்
ஷார்ஜா
நன்றி :
ஐஎம்சிடி யின் சிறப்பு மலர் 2009