அன்புள்ள அம்மா

இலக்கியம் கவிதைகள் (All) காரைக்குடி பாத்திமா ஹமீது

காரைக்குடி பாத்திமா ஹமீது

ஷார்ஜா

கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால்

கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் !

 

வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால்

நெல்மணிகள் இல்லாமல் நான் நீர்த்துப் போயிருப்பேன் !

 

பெண்தானே என்று நீ கருதியிருந்தால்

மண்ணோடு மண்ணாக நான் மடிந்து போயிருப்பேன் !

 

சோதனைகள் பல கடந்து

சுகமாக என்னைப் பெற்றெடுத்தவளே,

 

சிறப்பாக இம்மை மறுமை கல்வி கொடுத்து

சீராக என்னை வளர்த்தெடுத்தவளே,

 

படைத்தவனைக் காண எண்ணும்போதெல்லாம்

உன்முகம்தான் எனக்குக் காட்சியாகின !

சொர்க்கம் என்பது நின்காலடியில்

மட்டும்தான் தாயே வேறொன்றும் வேண்டாம் !

 

ஆண்டாண்டு காலங்கள்

ஆனாலும் அன்னையே

உன்னை நான் மறவேன் !

மாதங்கள் பல நூறு கடந்தாலும் மாதாவே

உன்னை நான் மறவேன் !

 

வார்த்தைகள் கிடைக்கவில்லை

வளர்த்தவிதம் எழுதுவதற்கு

 

கவிதைகள் பல நான் எழுதினாலும்

உன் காலடிகளுக்கே சமர்ப்பணம் !

என்றென்றும் அன்புடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *