விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்)

இலக்கியம் நூல் அறிமுகங்கள்

http://dinamani.com/book_reviews/2013/06/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article1617085.ece

விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்) – பவளசங்கரி திருநாவுக்கரசு; பக்.176; ரூ.80; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.

அன்னை தெரசா, அன்னிபெசண்ட் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை. செüந்திரம் ராமச்சந்திரன், சுசேதா கிருபளானி, இந்திராகாந்தி, லெட்சுமி சேகல், ஈ.வே.ரா.மணியம்மை உள்ளிட்ட 22 பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இந்தப் பெண் சாதனையாளர்களின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், கருத்துகள், அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணிகள் போன்றவற்றை மிக எளிய நடையில் சுவையுடன் நூல் விவரித்துச் செல்கிறது.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் சாதனையாளர்கள் பல்வேறு இயக்கங்கள், நோக்கங்கள், கருத்துகளைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலங்களும் கூட வேறுபட்டவை. எனினும் தங்கள் வாழ்நாளில் சாதனை செய்தவர்கள் இவர்கள் என்ற ஓர் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பலருக்கும் தெரிந்த பல்வேறு விவரங்களின் தொகுப்பு என்று இந்நூலை ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் தெரியாத – இதுவரை சொல்லப்படாத பல தகவல்கள், செய்திகளை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *