முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி விலக்கு ரோடு, குறுகலாகவும், விபத்து களமாகவும் உருமாறி வருகிறது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நேருக்குநேர் மோதும் அபாயம் உள்ளது. கடலாடி செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ரோடு தரமற்று மாட்டுவண்டி பாதையாக உள்ளது. குறுகலான பாதையால், போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு, விபத்து களமாக உருமாறி வரும், கடலாடி விலக்கு ரோட்டிற்கு பதிலாக, 6 கோடியே, 25 லட்ச ரூபாயில், புறவழிச்சாலை அமைக்கபடும் என்ற அறிவிப்பு பெயரளவிற்கு மட்டுமே உள்ளது.
வாகனங்கள் பெருகி வரும் நிலையில், புறவழிச்சாலை அமைப்பதில் ஏற்பட்டு தொய்வாலும் தற்போதுள்ள குறுகலான சாலையில், விபத்துக்கள் அதிகமாக நடந்து, வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே புறவழிச்சாலை வரும் முன் விபத்துகளை தவிர்க்க, தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் ÷காரிக்கைவிடுத்துள்ளனர்.