தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட.
மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், பூஜைக்கு மட்டுமல்ல, உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும்.
உணவில் ஃபிரஷ்ஷான எலுமிச்சையை சேர்த்து கொள்ளாதவரும் கூட, இங்கு கூறப்படும் எலுமிச்சை, எலுமிச்சை சாறு, அதன் சதை பகுதி மற்றும் அதன் தோல் ஆகியவற்றின் நலன்களை அறிந்து கொண்டு, எலுமிச்சையை உணவில் சேர்த்து கொள்ளலாமா என்று மறுபரிசீலனை செய்வர். எலுமிச்சை என்றாலே அனைவருக்கும் அதன் புளிப்புச்சுவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த புளிப்புச்சுவை நிறைந்த சாற்றில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியது. இப்படி பல மருத்துவ பயன்பாடுகளை உள்ளடக்கிய எலுமிச்சையின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தெரிந்து, இனிமேல் அதனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குடலை சுத்தப்படுத்துதல்:
எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கம் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கம் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
புற்றுநோய்:
லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.
லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.
ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்:
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவைகள் நோய் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.கல்லீரல் பிரச்சனைகள்:
ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும்.
ஊட்டச்சத்துக்கள்:
எலுமிச்சையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், ஃப்ளேவோனாய்டுகள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை.
உடல் வேதியியல் இருப்புகள்:
எலுமிச்சை அதிக அமிலத்தன்மை உடையது என்பதால், ஜீவத்துவ பரிணாமத்துடன் சேர்ந்து உடல் திரவங்களின் கார நிலையை சமன்படுத்துகிறது.
ஒவ்வாமை/அலர்ஜி:
எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூளை மற்றும் நரம்பு மண்டல சீர்குலைவுகள்:
எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் (Phytonutrient Tangeretin) பார்கின்சன் நோய் (Parkinson’s Disease) போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண்/பார்வை கோளாறுகள்:
எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின் (Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணபடுத்தும்.
ஆன்டி வைரஸ் (Anti Virus):
எலுமிச்சை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக இருப்பதைத் தவிர, அதில் இருக்கும் டெர்பின் லிமினாய்டு (Terpin Liminoids) எனப்படும் தாவர இரசாயனங்கள் மற்ற வகை வைரஸ்களுக்கு எதிரானவை என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நீரிழிவு:
நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் (hesperetin) இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.
பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்:
எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
முதுமை தடுக்கும்:
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்.