ஒன்றா … இரண்டா …

இலக்கியம் கவிதைகள் (All)

 

P.M. வாஹிதியார்

 

விடிந்தால்

தங்கையின் திருமணம்

மாப்பிள்ளை பெரிய இடமாம்

அழைப்பிதழ் பார்த்தாலே தெரிகிறது

 

தங்கையின் தோழிகளை நாங்களும்

எங்களை அவர்களும் பார்க்க

‘ஷாக்’ அடிக்காத மின்சாரம்

 

அண்ணனின் உலகமே வேறு

நண்பர்களுக்கு பார்ட்டியாம்

மூழ்கிவிட்டான் முத்தெடுக்க …

 

விடிந்தது

மாப்பிள்ளையை காணவில்லை

அதோ !

‘சேரா’ப் பூவால் மூடிவிட்டார்கள்

தான் கொடுக்கும் மஹர்தொகை

ஐநூற்று ஒன்றை

கூச்சமின்றி அறிவித்தனர்

வாங்கிய சில லகரத்தை மறைத்து…

 

சீரணிக்காத – சீரழிக்கப்பட்ட

விருந்து

விரயமாக்கப்பட்ட பொருள்

ஒரு சுன்னத்தை நிறைவேற்ற

இன்னும் எத்தனை

ஹராம்களை செய்வோம் ?

 

நன்றி : சிந்தனை சரம்

அக்டோபர் 2007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *