தமிழ் இலெமுரியா” திங்களிதழ், மும்பை

மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” திங்களிதழைத்  தற்போதுwww.tamillemuriya.com என்கிற இணைதளத்திலும் வாசிக்கலாம். இணைய தளத்தின் அனைத்துக் கூறுகளும் இன்னும் சில நாட்களில் முழுமை பெறும். எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர். கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர். www.tamillemuriya.com அன்புடையீர், தமிழ் இலெமுரியா கார்த்திகை […]

Read More

காமராஜர் !

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்! மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்! மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு […]

Read More

ஸஹர் செய்வதின் சிறப்பு

  புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.  عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ .  {  يَرْحَمُ اللَّهُ الْمُتَسَحِّرِين } நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) […]

Read More

முருங்கைக் கீரை

  எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று . அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச் சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியை தரவல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. ஆனால் இக்கீரையை சமைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பழுத்துப் போன, பூச்சுகள் அரித்த இலைகளை எடுத்து விட வேண்டும். முதிர்ந்த கீரையை விட […]

Read More

ஆண்களை ஆபத்தில் தள்ளாதீர்

  முபல்லிகா ஏ.ஒ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் தருவான். அவர்களில் ஒருவர், தகுதியும் அழகுமுடைய ஒரு பெண் தம்மை (தவறான உறவுச் செயலுக்கு) அழைத்த போதும் ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர் ஆவார்”. ஆனாலும் கற்பைப் பேண வேண்டும் என்ற அழகிய ஒழுக்கத்தை அற்புதமாக விளக்கிச் […]

Read More

கவிஞர் கருத்தான் தாயார் வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்து வரும் இஸ்மாயில் மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் ஆகியோரது தாயார் இன்று 14.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )   அன்னாரது மஃபிரத்துக்கா துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கவிஞர் கருத்தான் தொடர்பு எண் : 055 36 23 903   தகவல் : ஹெச் இப்னு சிக்கந்தர் தலைவர் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு […]

Read More

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?

பூங் குழலி 1:56pm Jul 2 காரைக்குடி சுரேஷ் குமார் எண்களை தமிழில் சொல்ல தெரியுமா? பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே அப்பெண், “1 2 3 4 5 6 78 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, […]

Read More

மாண்புமிகு மன்பவுல் அன்வார்

  ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ   வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே… வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய் பேராளன் அல்லாஹ்வின் பெருங்கொடையாம் புகழ் மிக்கக் கலைக்கூடம் மன்பவுல் அன்வார் !   தீராத தீன்பசி தேடிவந்தோர் திகட்டாத தேனின் ருசி அருந்தி நின்று பாரெங்கும் மன்பஈக்கள் பறந்து சென்று புகழ் பரப்பச் செய்யுமிடம் மன்பவுல் அன்வார்   கொடிக்காலில் வெற்றிலையைக் கிள்ளி வந்து கிடைக்கின்ற கூலியிலே தர்மம் தந்து கொடை […]

Read More

அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு

    நோன்புக் கடமை “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில் எல்லா நபிமார்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்ததாக திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது. “ஈமான் கொண்ட விசுவாசிகளே ! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல, உங்கள் மீதும் நோன்பு […]

Read More

அருள்வேதம் அல்குர்ஆன்

  அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான்   ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர் அலையும் அவரோ அந்நகர் துறந்தார் !   பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய் ஈசா நபியும் எழிலாய்ப் பிறந்தார் வருந்தும் தாயை வனப்புடன் நோக்கி பொருந்தும் மொழியாய்ப் புன்னகை சிந்தித் தேறுதல் கூறும் செல்லப்பிள்ளை ! ஆறுதல் கொண்டார் அன்னை மர்யம் !   […]

Read More