முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண் : 94423 19871 அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். எனினும் லுஹருக்கு முன்னதாக நல்லடக்கம் செய்யப்படும் […]

Read More

தொடு வர்மமும் அகுபங்ச்சரும்

தமிழகத்தின் வர்மக்கலை கிழக்காசியாவிலும் சீனாவிலும் பரவி தியானமும் உடல்நலமும் இணைந்த வாழ்க்கையே உயர் வாழ்க்கை என்ற கருத்தை நிலை நிறுத்தியது.  தொடுவர்மம் விளையாட்டு மற்றும் மருத்துவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தற்கால மருத்துவ முறைகளுடன் இணைந்துள்ளது குங்-பூ வைவிடத் தொடுவர்மம் பெண்கள் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது இந்த விழியத்தைப் பார்க்கும்போதே இந்தக் கலையை வீட்டில் சோதனை செய்யவேண்டாம் என்று கேட்கும் நிலையில் பெண்களுக்கு இந்தப் பயிற்சி கொடுத்தால் என்ன ஆவது என்ற ஐயம் கலந்த அச்சக்குரல் கேட்கிறது http://www.youtube.com/watch?v=Y1-4LqEIP0o […]

Read More

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை

  இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் […]

Read More

முகவரி தேடும் மார்க்கப் பயணம்

  திருமலர் மீரான்   மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள் வரம் தேடுகின்ற வெற்றிப் பயணம் ..!   அரபாத் அன்னையின் அருள் பால் அருந்த அனைத்து நாட்டு அருமாந்தப் பிள்ளைகள் அணிவகுக்கின்றன !   மக்கா மதீனா மணல் தொட்டில்களில் அயல்நாட்டு சிசுக்கள் ஆன்மீக மயக்கத்தில் அயர்ந்து உறங்கும் !   வயதான முதியோரும் வாலிபர் இளைஞர்களும் வயதையே […]

Read More

பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள்

  மதிநாகூரான்   பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள் ! பண்பாடு அழிக்கும் பராக்கிரமச் செயல்கள் !   மதவாதம் பிடித்த காட்டுமிராண்டித்தன காண்டா மிருகங்கள் காட்டும் செயல்களில் காடாக மாறிட கலங்கும் நகரங்கள் !   நயவஞ்சகத்தால் நாட்டார்களையெலாம் நடுங்கிடச் செய்யும் நரிகள் கூட்டம் !   ஒடுக்கப் பட்ட ஆட்டுக் குழுவினை ஆட்டிப் படைத்து அந்நியப் படுத்தி மோதிடச் செய்து குருதி குடிக்கும் கொடும் ஓநாய்கள் ! சிறுபான்மை இன முசல் மான்களை கடித்துக் […]

Read More

சமாதானப் புறாக்களின் சர்வலோக சங்கமம்

  திருமலர் மீரான்   அனைத்துலக அதிபதியின் அழைப்பினை ஏற்று சாந்தி மார்க்கச் சோலையின் சமாதானப் புறாக்கள் நேசமுடன் நடத்தும் நெடிய யாத்திரையே ஹஜ் என்னும் புனிதப் பயணம் !   மனிதப் பிரதிநிதிகள் வழி மா ஞாலமே துல்ஹஜ்ஜில் மக்கா மதீனா நோக்கி இடம் பெயர்கின்றது !   அரபி மாக்கடலில் அகில நாடுகளின் மனித ஆறுகள் தடையேதுமின்றி கண்ணியத்துடன் கைகோத்து புண்ணியம் பெறுகின்றன !   ஆலயம் கஅபாவில் அநேக நாடுகளின் கொள்ளை அழகு […]

Read More

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம்  தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் என அந்த தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிடுங்கள்; எஞ்சிய உடல்கட்டை மிஞ்சட்டும், அதுபோன்ற உடல் கட்டை நாளை பிறருக்கென வாழ்ந்த தெரசாவாகவோ, அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை மீட்டு நல்வாழ்வு அளிக்கும் […]

Read More

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம்

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது!  வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு ஆய்ந்தறிந்த தமிழறிஞர் பெருமக்கள் கவிஞர் அத்தாவுல்லாவின் அன்பிற்கினியவர்களாய் அமைந்திருந்த காரணத்தால் அணிந்துரைகள் வழங்கியிருப்பதும் அவை தமிழ்கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பட வேண்டியவர் அத்தாவுல்லா என்பதற்கான முழக்கம் போலிருந்தது! நினைவுகளில் எப்போதும் தமிழ் நீந்திக்கிடக்கும் கடல்போல் விரிந்திருக்க.. தோன்றிய எண்ணங்களை சுவைபட இவர் எடுத்துவைக்கும் அழகு தனித்துவம் கொண்டது! ஆன்மீகக் […]

Read More

இது தான் நோன்பு

  ( பொற்கிழிக் கவிஞர்  மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) அழைக்க : 99763 72229   படைத்த ரப்பின் பாசமுகவரிகளே…!   இல்லாமையால் பட்டினி சரிதான் ! ஆனால்.. இருந்தும் பசித்திருக்கிறோமே ! வல்ல அல்லாஹ்வுக்காக பசித்திருக்கிறோமே…! இது தான் நோன்பு !   எப்படியோ கரையும் பொழுதுகளை இபாதத்தால் கண்ணியப்படுத்துகிறோமே..! இதுதான் நோன்பு !   இறையச்சமின்னலில் தவறுகள் ஏதும் செய்யாதிருக்கிறோமே..! இதுதான் நோன்பு !   கலிமாவால் நாவை நனைத்து ஹக்கனின் நினைவை […]

Read More

காரைக்குடியில் நூல் ஆலயம் மற்றும் பழைய பொருட்கள் சேகரிப்பு

காரைக்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன் அவர்கள் இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு. ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார். செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய பொருட்கள் சேகரித்துவைத்துள்ளார்.. தான் அடுத்துள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறார். CECRI யில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். வைணவப் பெருந்தகை. சிகை வளர்த்து அம்சமாகத் திகழ்கிறார். […]

Read More