ரமழான் ஒரு விருந்தாளியல்ல, அழைப்பாளி!

ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்! ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்றதொரு மாதம் அல்ல. ரமழான் எங்களை அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அதன் அழைப்பு எங்களது செவிகளுக்கு எட்டவில்லை […]

Read More

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து பயந்து பரிட்சையெழுதிய அதே படபடப்பு, தேவையற்றதை வேறு வழியின்றி மனப்பாடம் செய்ததைப் போன்ற வேறு வழியற்ற அதே வாழ்க்கை, இன்னும் […]

Read More

குழந்தை

ஹைக்கூ வெளிநாட்டில் அப்பா தொலைபேசி உரையாடலில் அம்மா ஏக்கத்தோடு கவனிக்கும் குழந்தை ——————————————————- Father is in abroad Mother is talking over telephone Wathcing baby with despondency ——————————————————- முனைவென்றி நா. சுரேஷ்குமார், த/பெ த. நாகராஜன், 2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு, காந்திஜி சாலை, பரமக்குடி – 623707, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு. அலைபேசி: 8971066467, 8754962106. http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/

Read More

தமிழ் அகராதி

http://www.ekalai.com/kalanjiam/download/ இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி […]

Read More

பகைவனுக்கு அருளிய தகைமை

    அப்பாஸியக் கலீபா ஸஃப்பாஹ், தம் அமைச்சர், பெருமக்கள் புடைசூழத் தம் பூங்காவில் உல்லாசமாகப் பவனிவந்து கொண்டுள்ளார். அன்று கலீபா மிகவும் மகிழ்ச்சிகரமாகக் காணப்பட்டார். தம்மைச் சூழ வந்துகொண்டிருப்பவர்களுடன் அன்புடன் உரையாடிக் கொண்டு வந்தார். அப்பொழுது அவருடன் வந்து கொண்டிருந்தவர்களில் அவரின் மிகப்பெரும் விரோதியின் மகன் இளவரசர் இப்ராஹீமும் இருந்தார். அவருக்குக் கலீபா உயிர்ப்பிச்சை வழங்கி அவரை அன்புடன் ஆதரித்து அவருக்குத் தம் அரண்மனையிலேயே தங்க இருப்பிடம் நல்கிக் கெளரவித்து வந்தார். இப்பொழுது கலீபா இப்ராஹீமை […]

Read More

பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

  பேராசியர். டாக்டர் திருமலர். மீரான் பிள்ளை, திருவனந்தபுரம்     இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நீண்ட நெடிய காலம் கல்லூரிக் கல்விப்பணி ஆற்றி இப்போது பணிநிறைவு பெற இருந்தாலும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைசார்ந்த பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் முதுநிலை ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளராகப் பொறுப்பேற்று ஆய்வுப்பணியைத் தொடரவிருக்கும் நண்பர் பேராசிரியர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை அவர்கள் பெருந்தமிழியல் – புதிய பார்வைகள் என்னும் அரிய இந்நூலை நமக்கு தந்திருக்கிறார். பொதுவாக […]

Read More

பிரியாவிடை

  திருமலர் மீரான்   இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே !   அன்றொரு நாள் புனித இரவில் அர்ஷிலிருந்து வஹிக் குழந்தைகளை தெளஹீதின் தென்றலில் தாலாட்டி தாஹா நபியிடம் தந்த மாதத்தாயே !   உனது வருகைக்குப் பிறகே படித்துறைகள் காணாத எங்கள் செல்லப் பிள்ளைகள் வேதம் படித்தன ! செல்வப் பிள்ளைகள் ஜக்காத்தென்னும் ஞான ஸ்நான துறைகள் கண்டன !! […]

Read More

விறகாய் எரியும் வீணைகள் !

  _ திருமலர் மீரான் –   இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !   அன்று முல்லை படர தேரையே கொடுத்தான் அவன் பாரி ! இன்று பூவை படர ஏக்கர் லாக்கர் குக்கர் கார் ரெப்ரிஜிரேட்டர் என ஊரையே கேட்கிறான் இவனோ விய பாரி !   மயிர் உதிர்ந்ததற்காக மானம் போனதாக உயிர் விட்ட மான்கள் காட்டில் வாழ்ந்தன ! […]

Read More

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

  முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா

Read More

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தம் நீங்க: உலகின் நம்பர் ஒன் கில்லர்…மன அழுத்தம். முட்டையின் மஞ்சள் கரு அல்ல:-) துரதிர்ஷ்டவசமா நம் வாழ்க்கைமுறை அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைகிறது. அதில் இருந்து விடுதலை அடைய என்ன செய்யலாம் என பார்ப்போம். 1. உடல்பயிற்சி: பலருக்கும் உடல்பயிற்சியே அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைந்துவிடும். நானே பலதரம் இந்த தவற்றை செய்துள்ளேன். காட்டுதனமா உடல்பய்டிற்சி செய்வது, அதிக வேகத்தில் ஓடுவது, தூக்க முடியாத எடையை தூக்குவது என. இப்போது அதை […]

Read More