(17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு புதிய க்லலூரிகள் துவங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடடுள்ளார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரிலும், கடலாடியிலும் அரசு புதிய கல்லூரிகள் துவங்கப்டுகின்றன. இவ்விரு கல்லூரிகளும் ஜூலை.27 முதல் துவங்கப்பட உள்ளன. புதிய இரு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை குறித்து விண்ணப்பங்கள் நாளை மறு நாள்(ஜூலை.19) வரையிலும் வழங்கப்டுகின்றன.
கடலாடியிலும், முதுகுளத்தூரிலும் தற்காலிகமாக அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் நடைபெற உள்ளன.இதற்கிடையில் புதிய கல்லூரிகளுக்குரிய கட்டடங்கள் கட்டப்பட உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வந்திருந்தார். அமைச்சருடன் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், மருத்துவர் ஆர்.சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் க.நந்த குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.