திருமலர் மீரான்
முசுலிம் சமுதாய
முன்னணி ஏணியே !
யார் யாரையோ
ஏற்றி விடும் நீ
ஏங்கி நிற்கிறாய் !
ஏன் தோழ?
என்ன ஆயிற்று?
முசுலிம் சமுதாய
மறு தோன்றியே !
உழைப்பு ஊக்கம்
உன் உள்ளில்
சிவப்பாய் இருப்பதை
சிந்திக்காததேன்?
கனவிலும் காய்க்காத
கட்சிக் கம்பங்கள்
கொள்கையிழந்த
கூட்டத்தோடு நீ
கூடு கட்டுவதேன்?
குஞ்சுப் புறாவே?
இணை வைக்காதவனே !
இணைய தளங்களில்
இணைகளைத் தேடி
இணையத் துடிப்பதேன்?
வெப்ப சைட்டுகளில்
வெந்து நீ நீறாகி
வேதனைப்படுவதேன்?
வெள்ளி விடியலே?
கல்விப் பால் புட்டி
காத்து இருந்தும்
கடை வீதிகளின்
கலப்புப் பால்களின்
கவர்ச்சி பட்டு
காலம் கழிப்பதேன்?
இரவு நேரங்களில்
பகலை இழப்பதேன்?
விளம்பரம் வேண்டா
வெளிச்சக் கதிரே !
விளம்பும் அறம்வழி
விரைவாய்
பம்பரமாய் !
நன்றி :
முஸ்லிம் முரசு
ஜுன் 2008