இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.
அப்போது, அங்கு கற்றுத் தந்துகொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்தளவில் இருக்கும் அலுவலகப் பணிகளை பரிமாற்றம் செய்வதை கணினிக்கு மாற்ற முடியுமா என்று ஒரு சவால் விடுத்தார்.
அந்த சவாலை ஏற்று மின்னஞ்சலை கண்டுபிடித்து சிவா அய்யாத்துரை சாதித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 14 தான்.
தன்னுடைய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற சவால்களையும் சதிகளையும் அதிகம் சந்தித்த அவர், தற்போது தனியாக மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இ-மெயில் என்ற மின்னஞ்சல் இல்லா உலகைக் கற்பனை கூட செய்து பார்த்திர முடியாத சூழலில் அத்தகைய சாதனையைச் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவா அய்யாதுரை தனது அடுத்த சாதனைக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
http://puthiyathalaimurai.tv/