பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை
தமிழிலுள்ள எல்லா மரபு வடிவங்களுடன் அரபு, பார்சி, மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கிஸ்ஸா, மசலா, முனாஜாத், படைப்போர், நாமா ஆகிய புதிய வடிவங்களிலும் முஸ்லிம் புலவர்கள் பல படைப்புகளை இயற்றியுள்ளது. எடுத்துரைக்கத்தக்கதாகும். காப்பியம் கதைப்பாடல், நாட்டுப்புறவியல், ஞானப்பாடல், இசைத்தமிழ் ஆகிய வகைகளில் எண்ணற்ற வடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட காப்பியங்களை படைத்து முஸ்லிம் புலவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உமறுப் புலவரும், குணங்குடி மஸ்த்தானும் தவிர வேறு முஸ்லிம் புலவர்களே இல்லை எனும் ஒரு மாயையினை ஏற்படுத்திவிட்டது. தமிழ் வட்டம் எனலாம். ஆட்சி, அதிகாரக் கட்சியின் தோழமையுடைய அரசியலாளர்களாலும் முஸ்லிம் தமிழ் இலக்கியப் பணி முன்னிலைப்படுத்தப் படாதது நோக்கத்தக்கது. பீரப்பா 18,000 த்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பெரும் சாதனை படைத்துள்ளார். புலவர் நாயகம் செய்குனா நான்கு காப்பியம் உட்பட ஒன்பது நூல்களைத் தந்துள்ளார். வண்ணக்களஞ்சியர் மூன்று காப்பியம். ஒரு கவிதை நாடகம் இயற்றியுள்ளார். குஞ்ஞ மூசா கவிராசர் இரு காப்பியங்கள், இரு கதைப்பாடல்கள், பதினான்கு சிற்றிலக்கியங்கள் யாத்தளித்துள்ளார். குலாம் காதிறு நாவலர் இரு காப்பியங்கள் 16க்கும் மேற்பட்ட சிற்றிலிக்கியக்கங்கள். இரு இலக்கண நூல்கள் வழங்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது. பிச்சை இபுறாகீம் புலவர் 15க்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள், சதாவதானி செய்குதம்பி பாவலர் 15க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். கண்ணகுமது மகுதூம் முகமது புலவர் 40க்கும் மேற்பட்ட நூற்களின் படைப்பாசிரியராக திகழ்ந்துள்ளது. நோக்கத்தக்கது. செய்யிது முகம்மது ஹஸன் நாவலாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அப்துர் ரஹீம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் களஞ்சியம். நபிகள் நாயகம் காவியம், தன்னம்பிக்கை நூல்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தகக்து.
நன்றி :
முஸ்லிம் முரசு
அக்டோபர் 2012