மன அழுத்தம் நீங்க

மருத்துவக்குறிப்புகள் மருத்துவம்

மன அழுத்தம் நீங்க:

உலகின் நம்பர் ஒன் கில்லர்…மன அழுத்தம். முட்டையின் மஞ்சள் கரு அல்ல:-) துரதிர்ஷ்டவசமா நம் வாழ்க்கைமுறை அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைகிறது. அதில் இருந்து விடுதலை அடைய என்ன செய்யலாம் என பார்ப்போம்.

1. உடல்பயிற்சி: பலருக்கும் உடல்பயிற்சியே அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைந்துவிடும். நானே பலதரம் இந்த தவற்றை செய்துள்ளேன். காட்டுதனமா உடல்பய்டிற்சி செய்வது, அதிக வேகத்தில் ஓடுவது, தூக்க முடியாத எடையை தூக்குவது என. இப்போது அதை எல்லாம் மாற்றிகொண்டுவிட்டேன். காலையில் 8 கிமி நடை. 70 நிமிடம் ஆகும். மித வேக நடை. நடந்து முடித்தபின் வியர்வையே அவ்வளவா இருக்காது. நடக்கையில் இதயதுடிப்பு அதிகம் இருக்காது. ஒரு நாளைக்கு இருதரம் எல்லாம் நடந்தது உண்டு. அதை இனி மாற்றி ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் ஏரோபிக்ஸ், மித வேகத்தில் மேக்சிமம் 80 நிமிடம் என கொண்டு வர போகிறேன்.

2. நிறுவனமயமாக்கப்பட்ட விளையாட்டை ஒதுக்கி மனமகிழ்ச்சிக்கு ஆடுவது:

குழந்தைகளை பணம் கட்டி குதிரை ஏற்றம், நீச்சல் போட்டி. டென்னிஸ் போட்டி என அனுப்பாதீர்கள். கையில் கிரிக்கட் பேட்டை கொடுத்து தெருவில் கிரிக்கட் ஆட அனுப்புங்கள். குற்றாலீசுவரன், ட்ரையத்லான் அமுதா எல்லாரும் சின்ன வயதில் சாதனை செய்தார்கள். மறுக்கவில்லை. ஆனால் சின்ன வயதில் இப்படி புரபஷனலா ஸ்போர்ட்ஸில் இறங்குவது தேவையற்ற மன அழுத்தம். விளையாட்டு கம்படிடிவா இருக்கவேண்டியது இல்லை. மனமகிழ்ச்சிக்கு ஆடுவதா இருக்கணும்.

3. குழந்தைகள், வாழ்க்கைதுணையுடன் நேரத்தை கழித்தல்:

உங்களுக்கு 80 வயது ஆகிவிட்டது என வைத்துகொள்வோம். மலரும் நினைவுகளா மனதில் எது ஓடும்? என் சிறுவயதை நினைத்து பார்த்தால் அம்மாவிடம் கதை கேட்டது, அப்பா பேசிகாட்டிய கட்டபொம்மன் வசனம், தம்பி, தங்கையுடன் விளையாடியது இதெல்லாம் தான் நினைவுக்கு வருதே ஒழிய தினம் ரென்டு மணிநேரம் டிவி பார்த்தேன் என்பது எல்லாம் நினைவுக்கு வருவது இல்லை.இப்போது நினைத்தால் அப்பா, அம்மாவுடன் அதிக நேரம் செலவு செய்திருக்கலாம் என தான் தோன்றுகிறது.

பேஸ்புக், டிவி, கணிணி என நேரத்தை வீணடிக்க நிறைய ஆப்ஷன் உண்டு. ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தேவை. அப்பாவுக்கு ஐபிஎல், பையனுக்கு விடியோகேம், அம்மாவுக்கு டிவி தொடர், பெண்ணுக்கு இன்டெர்நெட் சாட் என நாலு பேர் வீட்டில் நாலு அறையில் அமர்ந்து தனி உலகில் வாழ்வது வாழ்க்கை அல்ல. என் சிறுவயதில் தினம் இரவு மொட்டைமாடியில் குடும்பமா அமர்ந்து நிலாசோறு உண்போம். மொட்டைமாடியில் பாயில் படுத்து உறங்குவோம். இந்த தலைமுறைக்கு நிலாசோறு என்றா என்னவென தெரியுமா என்பதே சந்தேகமா உள்ளது.

4. பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல

இரவு ஷிப்டில் அவுட்சோர்சிங், 18 மணிநேரம் ஆபிஸில் புரக்ராமிங் என வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஒரு சண்டேவை ஆபிசுக்கு கொடுப்பதா, குடும்பத்துக்கு கொடுப்பதா என தேர்வு வந்தால் அதை குடும்பத்துக்கு கொடுங்கள். என்ன அப்படி செய்தால் மேனேஜர் ஆக முடியாது. பரவாயில்லை. ஆய்வு ஒன்றில் வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பவரும், மில்லியன் டாலர் சம்பாதிப்பவரும் ஒரே அளவு மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் என கண்டுபிட்க்கபட்டது. ஐம்பதாயிரம் டாலருக்கு குறைவாக சம்பாதித்தால் வறுமை. மகிழ்ச்சி இல்லை. மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்தால் பரம மகிழ்ச்சி. ஆனால் நடுவே 50,000 முதல் 1 மில்லியன் வரை சம்பாதிக்கும் 80% மக்கள் ஒரே மாதிரி மகிழ்ச்சியில் தான் இருக்கிறார்கள். என்ன மேனேஜரா இருந்தால் 65 இஞ்சு டிவி வாங்கலாம். இப்ப 32 இஞ்சு டிவி தான் வாங்கமுடியும். ஆனால் வீட்டில் 65 இஞ்சு டிவியை வாங்கிவைத்துவிட்டு சண்டே ஆபிஸில் உட்கார்ந்து இருப்பதில் என்ன பலன்?

ரிலாக்ஸ் செய்யுங்கள்….பிடித்த புத்தகத்தை ரிலாக்சாக அமர்ந்து படியுங்கள். பிள்லைகளுடன் சுற்றுலா செல்லுங்கள். பிள்ளைகளை தங்கை வீட்டில் விட்டுவிட்டு வாழ்க்கைதுணையுடன் டேட்டிங் செல்லுங்கள். செலவு செய்தால் தான் மகிழ்ச்சி என இல்லை. அனைவரும் ஒன்றாக இருப்பதே மகிழ்ச்சி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *