பள்ளிப் பண்
ஹஸ்பி (B) ரப்பீ (B) ஜல்லல்லாஹ்
மாஃபீ (F) கல்பீ (B) கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்
இறைவா உனது கருணையினால்
இம்மை மறுமைப் பேறுகளைக்
குறையா தெமக்குக் கொடுத்திடுவாய் !
கொடுமை யனைத்தும் தடுத்திடுவாய் !
நிறைவாயுள்ள நலனீந்து
நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
கழுவித்தூய்மை யாக்கிடுவாய் !
(ஹஸ்பி)
பிறையாய்த் திகழும் எம்பள்ளி
பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
நிலைபேறுடைய எம்கொள்கை
குறையா தோங்க அருள்புரிவாய் !
குறைகள் தீர்க்கும் கோமானே !
அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
அடையும் நெஞ்சின் விரிவைப் போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
அருளைப் பொழிவாய் ரஹ்மானே !
(ஹஸ்பி)
(இயற்றியவர் பள்ளியின் நிறுவன முதல்வர்,
இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர், M.A.,அவர்கள் )