கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
எவன் தன்னை அறிகின்றானோ?
அவன் இறைவனை அறிந்து கொள்கிறான்!(நபிமொழி)
உடல் தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.(நபிமொழி)
பொறாமை நற்செயலை அழித்துவிடும்.(நபிமொழி)
ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது!உள்ளம் சீர் பெறாதவரை ஈமான் சீர் பெறாது!(நபிமொழி)
மக்களின் பணியாளனே தலைவனாவான்.மக்களுக்கு நல்லதை செய்பவன் சிறந்தவனாவான்!(நபிமொழி)
உங்களில் அளவுக்கதிகமாக வீண் பேச்சுக்கள் பேசுபவனும்,தற்பெருமையாக பேசுபவனும் என்னால் வெறுக்கப்பட்டவனாவான்.(நபிமொழி)
அண்டை வீட்டாரை துன்புறுத்தியவர் மறுமையில் கை,கால் இல்லாதவராய் எழுப்பப்படுவார்.(நபிமொழி)
அமைதியான குணம் பெற்றவர்கள் இம்மையிலும்,மறுமையிலும் சிறப்பு பெற்றோர் ஆவர்.(நபிமொழி)
உன்னைத் தள்ளியவரை நீ அணைத்துக்கொள்,உனக்கு அநீதி செய்தவரை நீ மன்னித்து விடு,உனக்கு தீங்கிழைத்தவருக்கு நன்மையே செய்!(நபிமொழி)
உங்களை ஒருவர் உபசரித்து உணவளிக்கத் தவறினாலும்,அவர் உங்களது இல்லம் வரும்போது உணவளித்து உபசரிக்க வேண்டும்.(நபிமொழி)