தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியி்ல கல்வி வளர்ச்சி் ஒரு பொற்காலமாக திகழ்கிறது என்று வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியி்ல பேசினார் மு.முருகன் எம்.எல். ஏ. .
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செல்வநநாயகபுரத்தில் அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான பெஞ்சு, மேஜைகள் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இது குறித்து முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மு.முருகனிடம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் முறையிட்டனர். இதைய டுத்து எம்.எல்.ஏ. நிதியி்ல இரு்நது ரூ.4 லட்சம் வழங்கி பெஞ்சு, மேஜைகள் வாங்க முருகன் எம்.எல்.ஏ. உதவினார். இதை யொட்டி செல்வநாயகபுரம் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு பெஞ்சு, மேஜைகள் வழங்கும் விழா, முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
யாதவர் சமூகத் தலைவர்(மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர்), லட்சுமணன், கிராமத் தலைவர் ராமச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகி்த்தார்கள். தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்றார். பெஞ்சு, மேஜைகள் வழங்கி முருகன் எம். எல்.ஏ. பேசியது: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியி்ல கல்வி வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆரம்ப க்லவி முத்ல் கல்லூரி கல்வி வரையிலும் ஏழை மாணவ, மாணவிகள் எந்தவித் சிரமம் இன்றி படிப்பதற்கு பல் வேறு திட்டங்களை நிறைவேற்றி, தாராளமாக நிதி உதவி செய்து வருகிறார். இதற்காக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் பொது மக்களும் என்றும் நன்றிக கடன் செலுத்த வேண்டும் என்றார்.
விழாவில் கிராம பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் முத்துச்சாமி நன்றி கூறினார்.