எண்ணமே வெற்றிக்கு வழிகாட்டும்
ஜனுபியா பவுசியா பேகம், தேவிபட்டினம்
உலகில் பல அரிய சாதனைகளையும், மங்காப் புகழையும் பெற்றுத் திகழ்ந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு கடின உழைப்பு, ஒரு உந்து சக்தி, தூண்டுகோல் என யாராவது செயல்பட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் சாதித்தவர்களின் மனதை நெகிழச் செய்தவர்கள் இருந்திருப்பர்.
ஒரு விருட்சம் சிறப்பாக வளர்வதற்கு சத்தான விதையே காரணம் என்றால் அது மிகையாகாது. அதுபோல உலகத்தில் வாழ்ந்து சாதித்தவர்களின் சிலரது வாழ்க்கை ஏட்டை புரட்டிப் பார்த்தால் அவர்கள் கடந்து வந்த கடினப்பாதை புரியும். நான் ஏழை, என்னால் எப்படி முடியும்? என இன்றைய இளைய சமுதாயத்தினர் பலருக்கும் ஒரு தாக்கம் மனதில் மெலிதாக இழை அழிக்க உருவாகும். புரையோடவரும் புண் என இளைய சமுதாயத்தினர் தங்களால் முடியும் என்ற எண்ணத்தை, ஆக்கத்தை, நம்பிக்கையை முதலில் தங்களுக்குள்ளாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்த சிலரது தடயத்தை பார்ப்போமா?
1) நம் இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக வீற்றிருந்த அணு விஞ்ஞானி பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீன் பிடித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையும் ஒரு மீனவரே.
2) அமெரிக்காவை ஆண்ட ஆபிரகாம் லிங்கனின் தந்தை ஒரு விறகு வியாபாரி.
3) புதுக்கவிதைகளும், மரபுக்கவிதைகளும், புனைந்த ஷேக்ஸ்பியரின் தந்தை குதிரை கண்காணிப்பாளர்.
4) கணிதமேதை சகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் வித்தை காட்டும் தொழிலாளி
5) இத்தாலியத் தலைவர் கரிபால்டின் தந்தை ஒரு மீன்பிடித்தொழிலாளி.
6) சர்தார் வல்லபாய் படேலின் தந்தை விவசாயி
7) தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தை படகு கட்டும் தொழிலாளி
8) ரஷ்யத் தலைவர் ஸ்டாலினின் தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி
9) அணு விஞ்ஞானி ஜே.ஜே. தாம்சனின் தந்தை புத்தக வியாபாரி
10) மின்சாரத்தைக் கண்டுபிடித்த ஆம்பிளரின் தந்தை சணல் தயாரிக்கும் தொழிலாளி
11) சோடாவை கண்டுபிடித்த ஜேஸப் பிரிஸ்ட்லியின் தந்தை நெசவுத்தொழிலாளி
12) விஞ்ஞானி கலிலியோவின் தந்தை கம்பளம் நெய்யும் தொழிலாளி.
இவ்வாறு ஏழ்மையையே வாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு பிறந்த இவர்களால் மட்டும் எவ்வாறு சாதிக்க முடிந்தது? யோசிக்க முடிகிறதா? இவை மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கையின் தத்துவத்தையும் நிரூபித்து வருகிறது. இதுதான் நம்முடைய எண்ணத்தின் வாழ்க்கையாக அமைந்துள்ளது.
நன்றி :
முகவை முரசு
ஜனவரி 28 – பிப்ரவரி 3, 2011