வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்!

இலக்கியம் கட்டுரைகள் கீழை ஜஹாங்கீர் அரூஸி

Scan (1)

வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்!

                             கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.(அல்குர்ஆன்-3:92)
தவறான சிந்தனைகளை கைவிடுங்கள்,ஏனெனில் தவறான சிந்தனைகளே மிகப்பெரிய பொய்மைக்கு வழிவகுக்கும்.(நபிமொழி)நூல்:புகாரி
முக நக நட்பது நட்பன்று,
நெஞ்சத்து அக நக நட்பது நட்பு.(திருக்குறள்)
தொடங்கி பாதியில் விட்டுவிடுவதை விடத்தொடங்காதிருப்பது மேலானது.(பழமொழி)
பொய் சொல்லிப் பரிசு பெறுவதை விட உண்மையை சொல்லி துன்பப்படுவது மேலானது.(பழமொழி)
அறிவை விட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.(பழமொழி)
கடனில் மிச்சமோ,நெருப்பில் மிச்சமோ,பகைவனில் மிச்சமோ விட்டு வைக்காதே!அது மறுபடியும் கிளம்பி உன்னை அழிக்க முற்படும்.(பழமொழி)
அருளைத் தேடுமுன் அன்பைத்தேடு,ஆஸ்தியைத்தேடுமுன் அறிவைத்தேடு.(பழமொழி)
பல இடத்தில் பலதொழில் செய்வதைவிட ஒரே இடத்தில் ஒரே தொழிலில் உன் கவனத்தை செலுத்தினால் அதிக பலனடைவாய்.(பழமொழி)
சின்ன செலவானாலும் யோசித்து,கவனித்து,எண்ணி,கணக்கிட்டு செலவு செய்யுங்கள்.ஏனென்றால்,சிறிய ஓட்டையே பெரிய கப்பலை மூழ்கடித்து விடும்.(பழமொழி)
உலகத்தில் பிறந்தவர்கள் யாரும் உபயோகமற்றவர்கள் என்பது கிடையாது,ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையுள்ளவர்களாகவே இருப்பார்கள்.(ராஜ்)
ஆட்சியாளர்களின் உண்மையான பாதுகாப்பு,மக்களின் அன்பே தவிர மெய்காவல் படையல்ல.(கீழை அரூஸி)

(தொடர்- 2)

 
                         கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
 
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக்கூடிய(அற்ப)இன்பத்தை தவிர வேறில்லை.(அல்குர்ஆன் 3:185)
 
ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது;உள்ளம் சீர் பெறாதவரை அவனது ஈமான் சீர் பெறாது!(நபிமொழி)
 
நன்மைக்காக வழி வகுப்பவர் அதைச்செய்தவருக்கு கிடைக்கும் வெகுமதியை பெறுவார்!(நபிமொழி)
 
அமைதி இல்லாத சமாதான காலத்தைவிட போர்க்காலமே மேலானது.(பழமொழி)
 
மூளையில் அறிவை சேர்ப்பதைவிட இதயத்தை பண்படுத்தி வளர்ப்பது சிறந்தது.(பழமொழி)
 
ஆசை இருப்பவனிடம் ஆனந்தமும் அன்பும் தங்குவதில்லை.(பழமொழி)
 
கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்,தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.(பழமொழி)
 
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாத மனிதன் தன் திறமைகளை வெற்றியாக மாற்ற முடியாது.(பழமொழி)
 
வதந்தீ என்பது ஆயிரம் நாக்கு ஆயிரம் வாயுடன் கூடிய இரும்பின் குரல்.(பழமொழி)
 
ஆணவமும்,அகம்பாவமும் என்றாவது ஒரு நாள் நமக்கே எதிரியாக நிற்கும்.(பழமொழி)
 
உன்னுடைய மிக மோசமான எதிரியையோ,மிகச்சிறந்த நண்பனையோ உன்னிடத்திலேயே நீ காணலாம்.(பழமொழி)
 
உங்கள் (செயல்களுக்குரிய)நற்கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான்.(அல்குர்ஆன் – 3:185)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *