இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !

இலக்கியம் கவிதைகள் (All) பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய

இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு !

( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229 )

இளைஞனே ….!

சிகரம் தொடச்

சிறகுகள் விரிக்க வேண்டிய நீ

விபரீதப் பள்ளத்தாக்கில்

விழுந்து கிடக்கின்றாயே …… !

எப்போது ……. நீ

எழப் போகிறாய்……..?

 

தம்பி……….!

விழுவது மட்டும்

விபத்தல்ல……. படுகுழியில்

விழவைப்பதும்…..

விபத்தே…..!

 

வலைக்குள் மீன் விழும் !

ஆனால்…நீ

விழுந்திருக்கும் வலை

வலையல்ல:- உன்

வாலிபத்தை உறிஞ்சும்

நாச வலை !

மோச வலை !

அறிவாயா…?

 

உன்னை உசுப்பேற்றி

உணர்ச்சியின் உச்சிக்கு

உன்னைக் கொண்டுபோகும்

அவர்களா…

உன் நல விரும்பிகள்…?

கொஞ்சம் எண்ணிப்பார் !

 

கூடுயென்றெண்ணி

கூண்டுக்குள் கிடக்கின்றாயே….!

உன் விடுதலை எப்போது….?

அங்கே…

மாடாய் உழைத்தாயே ….!

மாற்றமென்ன கண்டாய்….?

மெளனிக்கிறாயே….?

இதுதான் உன் பதிலா…..?

 

பிற்போக்கு கும்பலை

முற்போக்கென்று எண்ணி

இதுவரை நீ

ஏமாந்தது …. போதும் !

 

நீ இருக்கும் முகாமை

உடனே காலி செய் !

பீடு நடைபோட்டு வா !

பிடி ! பிறைக்கொடியை !

இருட்டில் நீ

உழன்றது…… போதும் !

எழு !

எடு உன் மணி விளக்கை !

ஏற்று மணிச்சுடரை !

இப்போது ……

உன் பாதை தெரியும் !

உன் பயணமும் புரியும் !

 

நீ வரவேண்டிய திசை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குதான் !

இதை நோக்கி……

உறுதியுடன் வா !

உள்ளன்போடு ……… வா !

வெற்றி ………….

உன் பின்னால் ……..வரும் !

 

தம்பி…..!

இனி உன் மேடை

பிறை மேடையாகும் !

இனி உன் தோழமை

பிறைக்கொடியே !

 

வானம் தொடும்

வல்லமை உனக்கு உண்டு !

மறந்து விடாதே !

உன் லட்சியப் பயணத்திற்கு

கும்பகோணம்

முன்னுரை……. எழுதியிருக்கிறது !

அணிந்துரையை

உன் பின்னால் வரும்

நம் தம்பிகள் …… எழுதுவார்கள்! (இன்ஷா அல்லாஹ்)

 

இளைஞனே…….. வா!

இதயமே…….. வா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *