கவிக்குயில் சரோஜினி தேவி

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )     வங்காள தேசத்தில் உள்ள பிரம்ம நகரில் அகோரநாத் – வரதசுந்தரி தம்பதியர்க்கு 1879 பிப்ரவரி 13 ல் மூத்த மகளாகப் பிறந்தார் சரோஜினி தேவி. தமது 12 வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார். இளம் வயது முதலே கவிதை இயற்றுவதில் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார். சர்வால்டர் ஸ்காட் எனும் ஆங்கிலக் கவிஞரின் அடியொற்றி ஆங்கிலக் கவிதைகள் புனைந்தார். சரோஜினியின் ஆங்கிலக் […]

Read More

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் நாட்டு மக்கள் அனைவராலும் ‘நாட்டாரையா’ என அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்பெற்றவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார். தமிழன்பர்களின் நெஞ்சங்களில் நின்ற சொல்லராய், நீடு தோன்றினியராய் வாழ்ந்து வரும் நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஏப்ரல் 12-ல் முத்துசாமி நாட்டார் என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார். தம்முடைய […]

Read More

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   மிகச்சிறந்த பேராசிரியராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை, திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 மார்ச் 2 அன்று பிறந்தார். பிறவிப்பெருமாள் – சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார். அக்கால வழக்கப்படி சேதுப்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் பின்னர் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 1915 ம் ஆண்டு […]

Read More

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள்

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள் ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   விபுலானந்த அடிகள் தொடக்கக் கல்வியை காரைத் தீவில் மெதடிஸ்த சங்கப் பாடசாலையிலும், பின்பு கல்முனை நகரிலும், மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஆங்கிலப் பாடசாலையிலும் பயின்றார். 1906 ல் கேம்பிரிட்ஜ் ஜூனியர் தேர்விலும் 1908 ல் கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1909 ல் மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுப் பின்னர் கல்முனை கத்தோலிக்கச் சங்கப் பாடசாலைக்கு […]

Read More

மாவீரர் குஞ்சாலி மரைக்காயர்

சுதந்திர டைரியில் ஒரு பக்கம் (மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் பற்றிய நினைவுச் சொல்லோவியம்) ‘தமிம்மாமணி’ கவிஞர். மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி   வரலாறு, எல்லோரையும் நினைவு கொள்ளுவதில்லை. தன் நேசிப்புக்குரிய சிலரையே தன் ஞாபக டைரியில் குறித்துக் கொண்டு பூரிக்கிறது. அந்த வகையில் வரலாற்றின் பக்கங்களுக்கு வாசம் சேர்த்தவர் ஒருவர். அவர் தக்வாவில் ஒரு தங்கம். தைரியத்தில் ஒரு சிங்கம். அவருக்கு நீண்ட காலமாகவே ஒரு தாகமிருந்தது. நமது நாட்டை மொய்த்திருந்த அன்னிய வெள்ளையிருட்டை அடித்து நொறுக்கி […]

Read More

அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?

  ( கவிஞர் ஆலிம் செல்வன் )   கடமையானதே என் செய்வேன் ! கருணைக் கடலே என் இறைவா ! கடமை தவறிடக் கடவேனோ கண்மணி நபிஎம் பெருமானே !   உன்னையே தொழுவேன் உன்னையே புகழ்வேன் உன்னருள் வேண்டி இறைஞ்சிடுவேன். என்னிரு கைகள் ஏந்திய மறையும் ஏந்தலின் அறவுரை செயல்முறையும்   உண்மையின் தன்மையை ஒளிர்ந்தெழச் செய்து உயர்நெறி வாழ்வினை வகுத்தளிக்கும். உன்னருள் படைப்புக்(கு) உன்னருள் பாயும்; உன்னத வழியினைப் பகுத்தளிக்கும்.   தொழுகையும் […]

Read More

அழகு நிறைந்த அமீரகப் பயணம்

  ( நல்லாசிரியர் எஸ். சையத் அப்துல் சுபஹான் MSc M.Phil, B.Ed முதல்வர், அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் )   எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அமீரகப் பயணம் 21.04.2011 முதல் 01.05.2011 முடிய மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தீன் இசைப்பாடகர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் பெரும் முயற்சியால் இந்தப் பயணம் சிறந்து விளங்கியது. 21.04.2011 காலை 9 மணிக்கு அருமை நண்பர் தாஜுதீன் பெற்றெடுத்த அருமைச் […]

Read More

சங்கத் தமிழ் அனைத்தும் தா !

  1.எங்கும் தமிழ் தங்கத்தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன் தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு 5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து 6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் ! 7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் ! 8. கல் தோன்றி […]

Read More

தாலாட்டு

கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு                            தாலாட்டு இராகம் : நீலாம்பரி   ‘குன்’னென்ற சொல்லின் குறிப்பால் கொடையளக்கும் பென்னம் பெரியோனின் பேரருளால் வந்துதித்த அன்புக்(கு)கரசி ஆயிஷா தாலேலோ ! அன்னை நிலோஃபரின் ஆருயிரே தாலேலோ !     வண்டலூர் பிறைப்பள்ளி வரலாற்றில் […]

Read More

வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )

    நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை   எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது   விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல், புரட்சி, தெரசாவே,   இப்படி சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது   வரலாற்றில் விளைந்த சாதனைச் சொற்கள் சாவியாய் விளைந்து சாதாரணமாய்ச் சுவரில்   வரலாறும் தெரியாமல் வருங்காலமும் உணராமல் விளம்பரமாய் எல்லாம் வெளிச்சமாகிறது   ஒருநிலையில் இல்லாத நானும் மனமும் ஒரு […]

Read More