பாத யாத்திரை
க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
என் பாதங்களே
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்தப் பயணம்?
சுமை தாளாமல்
என்னை எங்கே
இறக்கி வைக்கப் போகிறீர்கள்?
கால்களே
உங்களுக்குச் செய்யும்
கைமாறு எதுவோ?
ஒருநாள்
உங்களைத் தோளில் சுமந்து
என் நன்றியைச் சொல்ல
என் தோழர்கள் வருவார்கள்
A Pilgrimage by Foot
Ah, my feet
How many more years
Should this journey prolong?
When will you
Lay me down
Unable to bear the burden?
Ah, my feet
How could I pay back in gratitude?
A day may come
When my friends
Would hold you aloft
On their shoulders
To say may thanks
நன்றி :
சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றம், பெருவிரைவுப் போக்குவரத்துக் கழகம் இரண்டின் ஆதரவுடன் 21.05.2011 முதல் எம்.ஆர்.டி. ரயில் வண்டிகளிலும் அவற்றின் நிலையங்களிலும் வைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை