கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன.
வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என உயர்ந்து நிற்கும் கட்டிடங்களாலும் சிற்றூர் எனும் தோற்றம் மாறுபட்டு தெரிகிறது.
இந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்தவர்களில் வள்ளல் சீதக்காதி அவர்களும் ஒருவர் என்பது நினைக்கும்போது உண்மையிலேயே இஸ்லாமிய சமுதாயம் ஒருமுறைக்கு இருமுறை பெருமையாக மார்தட்டிக்கொள்ளலாம்.
நன்றி :
சமவுரிமை – ஆகஸ்ட் 2011