ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

உள்ளுர் கல்வி நிலையங்கள் ர‌ஹ்மானியா நிறுவனங்கள்

 

உத்திரகோசமங்கை ரோடு, முதுகுளத்தூர் – 623 704.

(மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது)

 

விளக்கக்குறிப்பு

அறிமுகம்

தொழில் துறையிலும் கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியாகிய முதுகுளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று மிகவும் அவசியமென கருதி நயினாமுகம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் ஆதரவுடன் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் முதுகுளத்தூரில் 1995 ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சியினை குறைவான செலவில் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

அங்கீகாரம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அவர்களின் அனுமதி எண் 3/38930/95 நாள் 20-2-96 ஆணையின்படி மாநில அரசின் அங்கீகாரமும், DGET எண்: 6/22/10/96TC ஆணையின்படி மத்திய அரசின் அங்கீகாரமும் பெற்று இந்த தொழிற்பயிற்சி நிலையம் முறைப்படி சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

தொழில் பிரிவுகள்

1. எலெக்ட்ரீசியன்   – 2 ஆண்டுகள்

2. பிட்டர்            – 2 ஆண்டுகள்

3. வயர்மேன்        – 2 ஆண்டுகள்

சேர்க்கைக்கான கல்வித்தகுதி

1.எலெக்ட்ரீசியன்     – SSLC தேர்ச்சி & +2

2. பிட்டர்             – SSLC தேர்ச்சி & +2

3. வயர்மேன்         – SSLC தேர்ச்சி / தோல்வி

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

கல்விப்பயிற்சி

NCVT யினால் வடிவமைக்கப்பட்ட பாடத்தின்படி மாணவர்களுக்கு திறமையும், அனுபவமும் மிக்க ஆசிரியர்களால் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாதந்தோறும் தேர்வுகள் நடத்தி விபரத்தை பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டைகள் மூலம் தெரியப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு இலட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள தொழிற்கூடங்களில் NCVT பாடத்திட்டத்தின்படி செய்முறை பயிற்சிகள் சிறப்பான முறையில் அளிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்கள் முழுமையான தொழிற்பயிற்சி பெற வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

சிறப்பு அம்சங்கள்

ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒழுக்கமுள்ள மாணவர்களாய் திகழ்வதற்கு இடைவிடாத கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொழிற்சாலைகளை பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் படிப்பதற்கு ஐ.டி.ஐ வளாகத்தில் இலவச தங்கும் விடுதி வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கு அரசாங்க படிப்பு உதவிப்பணம் பெற்று வழங்கப்படுகிறது.

மாலை நேரத்தில் விளையாடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி முடிந்த மாணவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், எளிதில் வேலைவாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அப்ரண்டிஸ் செய்வதற்கும் வழிகாட்டப்படுகிறது.

பயிற்சிக் கட்டணம்

முதலாம் ஆண்டு       இரண்டாம் ஆண்டு

எலெக்ட்ரீசியன்         Rs. 12000                         Rs. 12000

பிட்டர்                  Rs. 12000                         Rs. 12000

வயர்மேன்              Rs. 10000                         Rs. 10000

நன்கொடைகள் வாங்குவதில்லை மாதக்கட்டணம் வசூலிப்பது இல்லை.

பயிற்சிக்கட்டணத்தை இருதவணைகளில் செலுத்தலாம்.

 

 

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தைத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.25 பணவிடை (Mo) மூலம் அனுப்பு விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கீழ்காணும் சான்றிதழ் நகல்களோடு

முதல்வர், ரஹ்மானியா ஐ.டி.ஐ. உத்திரகோசமங்கை ரோடு,

முதுகுளத்தூர் – 623 704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ் நகல்கள் :

1. பள்ளி இறுதித்தேர்வு (SSLC) மதிப்பெண் பட்டியல் நகல்

2. இறுதியாகப் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TC) நகல்

3. நிரந்தரச் சாதிச் சான்றிதழ் நகல்

4. கூடுதல் கல்வித்தகுதி இருப்பின் அதற்குரிய சான்றிதழ்களின் நகல்

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

முதல்வர்       :  9486014778

நிர்வாகி        :  9443919947

ஐ.டி.ஐ          :  9368790165

பானு பிரஸ்    : 04576 – 222527

இவண்

P. பாக்கியநாதன் D.E.E.E.,         தேசிய நல்லாசிரியர் டாக்டர். ஹாஜி

முதல்வர்                      S. அப்துல் காதர் M.A.,B.Ed.,

நிர்வாகி

 

 

நிர்வாகம்

நய்னா முகம்மது காதரம்மாள் டிரஸ்ட்

( பதிவு எண் 7/93 )

முதுகுளத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *