ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி),நூல் :ஹாகிம்
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி) நூல்: அபூதாவூத்
சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:( திர்மிதி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்‘(ஆதாரம்: அஹ்மத்)
மற்றொரு அறிவிப்பில் ஜும்ஆ அரஃபா நாளைவிடவும், இரு பெருநாட்களை விடவும் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜும்ஆவின் சில மஸ்அலாக்கள்: (ஹனபி). ஜும்ஆ தொழ கடமைப் பட்டவர்கள் சுதந்திரமான ஆண், பிரயாணத்தில் இல்லாத ஊர்வாசி,தேக சுகமுள்ளவர்,நடந்து போக சக்தியுள்ளவர்,கண் பார்வை உடையவர்,பகைவனின் பயமில்லாதர் – ஆகியவர்கள் மீது தான் ஜும்ஆ தொழுகை கடமையாகிறது.{பெண்களுக்கு ஜும்ஆ கடமை இல்லை}
லுஹர் நேரம் ஆரம்பமாகி அந்நேரம் முடிவதற்குள் ஜும்ஆ தொழுகையும் நிறைவேறவேண்டும்.இரண்டு குத்பாக்கள் ஒதின பின்பு தான் ஜும்ஆ (பர்ளு) தொழவேண்டும். ஜும்ஆத் தொழுகையில் இமாம் ஜமாஅத்துடன் ஒரு ரக்கஅத்தாவது முழுதும் கிடைத்தால்தான் ஜும்ஆ தொழுகையின் பலன் கிடைக்கும்.
ஜும்ஆ தொழுகை
ஜும்ஆ தொழுகை ஒரு பர்லான-கட்டாயக் கடமையான வணக்கமாகும்,வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக் கிழமையில் இந்த தொழுகை இரண்டு குத்பா எனும் உரையையும் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய சமூக அமைப்பில் ஜும்ஆ தொழுகைக்குரிய அந்தஸ்து, ஜும்ஆ தொழுகைக்குரிய இடம் தனியானது :சிறப்பானது .ஒருவார காலம் ஆங்காங்கே பள்ளி வாசல்களிலும்,திறந்த வெளிகளிலும்இன்னும் பல இடங்களிலும் ஐந்து வேலை தொழுகைகளை தொழுதுவந்த மக்களை ஜும்ஆ தொழுகையானது அனைவர்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கிறது .
அவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் மத்தியில் (மார்க்க உபதேச பிரசங்கம்)குத்பா ஊரை நிகழ்த்தப்படுகிறது.அவ்வுரையில் இஸ்லாமியக்கருத்துக்கள் இடம் பெறுகின்றன,அல்லாஹ்வின் கட்டளை,அவனின் தூதர் (ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள் இடம்பெறுகின்றன. முஸ்லீம்களின் எழுச்சியைப் பற்றி,மார்க்கத்தில் எது கூடும்,எது கூடாது மற்றும் மார்க்கம் சம்பத்தப்பட்ட அனைத்து விசயங்களும் இடம்பெறுகின்றன,அதிலும் குறப்பாக முலீம்களின் ஒற்றுமையைப் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது
வாரவாரம் நடைபெறும் இவ்வற்புதவணக்கம்தான் ஜும்ஆ தொழுகை என்ரளைக்கப்படுகின்றது, அது இரண்டுரகா அதுகளைக்கொண்டது ஜும்ஆ தொழுகை கடமையானவர்கள் தகுந்த காரணமின்றி அதை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்அத்தகையவர்களை (தொழுகாதவர்களை)கடுமையாக கண்டித்துள்ளார்கள். عن عبدالله أن النبي صلى الله عليه و سلم قال لقوم يتخلفون عن الجمعة
: لقد هممت أن آمر رجلا يصلي ب الناس ثم أحرق على رجال يتخلفون عن الجمعة بيوتهم .தொழுகையை முன்னின்று நடத்துவதற்கு யாரையேனும் நியமித்துவிட்டு,ஜும்ஆ தொழுக வராதவர்களின் இல்லங்களுக்கு நானே சென்று அங்குள்ளோர் (இல்லங்களில்)இருக்கும்பொழுதே அவ்வில்லங்களுக்கு தீ வைக்க நினைக்கின்றேன்(.முஸ்லீம்:அஹ் மது). மற்றொரு முறை நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்قالرسول الله صلى ال له عليه و سلم من ترك الجمعة ثل اث مرات تهاونا بها كبع الله عل ى قلبه . யாரேனும் ஒருவர் தொடராக மூன்று ஜும்ஆக்களை தவற விட்டால் அல்லாஹ் அவரது உள்ளத்தில் முத்திரை யிட்டு விடுகிறான் .(அஹ்மது:திர்மிதி )என்று ஜும்ஆ தொழுகையைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.மேலும் அதை தவரவிட்டவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்கள்
எனவே ஜும்ஆ தொழுகையை அதன் முறைப்படி தொழுகவேண்டும்.நமது நாயகம் (ஸல்)அவர்கள் தொழுது காட்டிய வழிமுறைப்படி தொழுகவேண்டும் அவ்வாறு நாம் தொழுதொமானால் தன் அன்பினால் இறைவநின் நல்லுதவி கிடைக்கும் , தொழுகையின் இறுதியில் அவனிடம் கூட்டாக கையேந்தி பிரார்த்திக்கின்றபோது நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துதருகின்றான்.யா அல்லாஹ் உயிர் உடலிளிருக்கும்வரை ஜும்ஆ தொழுகையை நியமமாக தொழுக நல்லுதவி செய்வாயாக ஆமீன்
.ஜும்ஆவும் சுத்தமும்…
ஜும்ஆ தினத்தன்று ஒரு முஸ்லீம் தம்மை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம் என்பது பற்றி நமது நாயகம் (ஸல்)அவர்கள் வெகுவாக மொழிந்துள்ளார்கள்.இயல்பாகவே ஒரு முஸ்லீம் சுத்தமாகத்தான் இருப்பான் காரணம் சுத்தம் ஈமானில் பாதி என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த ஒன்று என்றாலும் ஜும்ஆ தொழுகையில் மஹல்லாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்ருகூடுவாகள் பெரும் சனத்திரள் ஒன்றுகூடும் ஓர் இடத்தில் உடலால் சுத்தமாக இருப்பது அவசியத்திலும் அவசியம் என்பதை அனைவரும் ஏற்பர்..
ரஸுல்(ஸல்)அவர்கள் மொழிந்தார்கள். أن رسول الله صل ى الله عليه و سلم قال ” الغسل يوم الجمعة على كل محتلم والسوا ك ويمس من الطيب ما قدرله ஜு ம்ஆ தினத்தன்று பருவம் எய்திய ஒவ்வொருவர் மீதும் குளிப்பதும்,மிஸ்வாக் செய்(பல் துலக்கு)வதும்,இயன்ற அளவு நறுமணம் பூசிக்கொள்வதும்,கடமையாகும். (அபூ தாவூத்)மேலும் இதைவிட விளக்கமாகவும் விரிவாகவும் சொல்கிறார்கள் قال النبي صلى ا لله عليه و سلم
: ( لا يغتسل رجل يوم الجمعة ويتط هر ما استطاع منن طهر ويدهن من دهنه أو يمس من طيب بيته ثم يخر ج فلا يفرق بين اثنين ثم يصلي م ا كتب له ثم ينصت إذا تكلم الإم ام إلاغفر له ما بينه وبين الجم عة الأخرى )
ஒரவர் வெள்ளிக்கிழமையன்று குளித்து,தன்னை பூரணமாக சுத்தம் செய்து,எண்ணெய் தேய்த்து,நறுமணம் பூசி,பின்னர் நேரன்காலத்தோடு பள்ளிவாசலுக்கு வந்து,மற்றவர்களை தள்ளாமலும் தொல்லைபடுத்தாமலும் (இருத்தல் வேண்டும்). பின்னர் அவர் (சுன்னத்தான தொழுகைகளை)தொழுது,அமைதியாக உக்கார்ந்து குதுபாவை செவிதாழ்த்தி கேட்பாராயின்,அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி).
ஜும்ஆவுக்கு நேரங்காலத்துடன் செல்லுதல்:
மேற்கண்ட முறைப்படி குளித்து,எண்ணெய்தேய்த்து,நறு மணம் பூசி,தம்மை சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவர் நேரங்காலத்துடன் ஜும்ஆவுக்குச் செல்வதை இறைவனும் கட்டளையிடுகிறான்,நபிகளார் (ஸல்)அவர்களும் நற்போதனை யிடுகிறார்கள்,அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகிறான் {يَأَيّهَا الّذِينَ آمَنُوَاْإِذَا نُودِيَ لِلصّ لاَةِ مِن يَوْمِ الْجُمُعَةِ ف َاسْعَوْاْ إِلَىَ ذِكْرِ اللّ هِ وَذَرُواْ الْبَيْعَ ذَلِكُ مْ خَيْرٌ لّكُمْ إِن كُنتُمْ ت َعْلَمُونَ فَإِذَا قُضِيَتِ ال صّلاَةُ فَانتَشِرُواْ فِي الأر ْضِ وَابْتَغُواْ مِن فَضْلِ ال لّهِ وَاذْكُرُواْ اللّهَ كَثِ يراًلّعَلّكُمْ تُفْلِحُونَ} ( 62; 9-10) ஈமான் கொண்டவகளே!
ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,வியாபாரத்தை விட்டுவிட்டு,அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிவாசல்களுக்கு)விரைந்து செல்லுங்கள்,இது உங்களுக்கு மிகச்சிறந்ததாகும் –நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிசெல்லுங்கள்;அல்லாஹ்வின் அருளை தேடுங்கள்!மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்தவண்ணம் இருங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்(62; 9-10).
ரஸுல்(ஸல்)அவர்கள் மொழிந்ததாக அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழி கூறுவதாவது عَنْ أَبِى هُرَ يْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ – صلى الله عليه وسلم- قَالَ « مَ نِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَ ةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ ر َاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَ نَةً وَمَنْ رَاحَ فِى السَّاعَ ةِ الثَّانِيَةِفَكَأَنَّمَا قَ رَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِ ى السَّاعَةِ الثَّالِثَةِ فَكَ أَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْ رَنَ وَمَنْ رَاحَ فِى السَّاعَ ةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا ق َرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِى السَّاعَةِ الْخَامِسَةِ فَ كَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَ إِذَا خَرَجَالإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ » வெள்ளிகிழமைகளில் மலக்குகள் பள்ளிவாசல் கதவருகே வந்திருந்து ஜும்ஆ தொழுகைகென வருபவர்களின் பெயர்களை வருசைமுரைப்படி பதிந்து கொள்வர்.பள்ளிக்குள் வரும் முதலாவது குழுவினர் ஒரு ஒட்டகத்தை குர்பானி கொடுத்த நன்மையை பெறுவார்,அவர்களை அடுத்து பள்ளிக்குள் வருபவர்கள் ஒரு மாட்டை குர்பானி கொடுத்த நன்மையை பெறுவார், அவர்களை அடுத்து பள்ளிக்குள் வருபவர்கள் ஒரு செம்மறி ஆடை குர்பானி கொடுத்த நன்மையை பெறுவார், அவர்களை அடுத்து பள்ளிக்குள் வருபவர்கள் முறையே ஒரு கோழி,ஒரு முட்டையின் அளவு நன்மையை பெறுவர்,இவ்வாறு அவரவர் பள்ளிக்குள் வருவதை வைத்து தரம் பிரிக்கப்படுகிறது.இமாம் குதுபாவுக்காக வந்தமரும்வரை இப்படி பள்ளிக்குள் வருவோரின் பெயர்களை குறித்து வரும் மலக்குகள் பின்னர் தமது பதிவேடுகளை மூடி வைத்துவிட்டு குதுபாவை செவிமடுக்க (மலக்குகள்)அமர்ந்துவிடுகிண் றனர்(புகாரி;;முஸ்லிம்)
எனவே வெள்ளிக் கிழமையன்று முஸ்லிம்கள் முடிந்த அளவு இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி நேரங்காலத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்லவேண்டும். தம்மால் முடிந்த அளவு நபிலான தொழுகைகள் தொழுதபின் குர்ஆன் ஓதலாம்,அல்லாஹ்வை (திக்ரு)நினைவு கூறலாம்,இருகரமேந்தி பிரார்த்திக்கலாம்,ரஸூல் (ஸல்)அவர்கள்மீது சலவாத்து ஓதலாம் இன்னும் இது போன்ற நல்ல அமல்களில் ஈடுபடலாம்,எதுவரைஎன்றால் இமாம் குதுபா உரை நிகழ்த்த வரும்வரை இமாம் குதுபா ஓத ஆரம்பித்தவுடன் பள்ளிவாசலினுள் அமர்திருப்போர் அனைவரும் அமைதியாக,காது தாழ்த்தி குதுபாவை செவிமடுக்கவேண்டும்.குதுபா உரையில் சொல்லப்படுகின்ற இறைக்கட்டளை, நபி வழிமுறைகளை நமதுவாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வுடனும்,மிகுந்த ஆர்வத்துடனும் அதை கேட்கவேண்டும் பக்கத்தில் மற்றவர்கள் பெசிக்கொடிருந்தாலும் அவர்களையும் பேசாதீர்கள் என்றும் சொல்லக்கூடாது இப்படிப்பட்ட ஒழுக்கங்களைஎல்லாம் கடைபிட்த்தால்தான் ஜும்ஆவுடைய பலனும் நண்மையும் கிடைக்கும்.. ஜும்ஆ தொழுகை சார்ந்த அனைத்து அமல்களு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் எனவே அனைத்தையும் அறிந்து கடைபிடிப்பது அவசியத்திலும் அவசியம்.அல்லாஹுத்தாஆலா நம் அனைவர்களுக்கும் நிரந்தரமாக ஜும்ஆ தொழுகும் பாக்கியத்தையும்,இறை திருப்தியையும்,ஈருலக ஈடேற்றத்தையும்,தந்தருள்வானாக.. ஆமீன்.
J. S. S. அலி பாதுஷா மன்பஈ ஃபாஜில் ரஷாதி..
———————