பெட்டகம் – 2013

இலக்கியம் கட்டுரைகள்

002பெட்டகம் – 2013 =
கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால வரலாற்றுப் பொக்கிஷம்
++++++++++++++++++++++++++++++++++++++++++

கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில் கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும் கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். ஆனால் கோவை முஸ்லிம்களின் வரலாறு என்ன என்பதை இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை, கோவை முஸ்லிம்களின் மண் வாசனை மாறாமல் அவர்களின் மனம் கவரும் வகையில் அனைத்து விஷயங்களையும் தொகுத்து பதிவில் கொண்டு வருகிறார்கள் M. அமீர் அல்தாப் மற்றும் M. ஒமர் ஷெரீப் ஆகியோர் –

கோவையில்
மஸ்ஜிதுகளும் மற்றும் மதரஸாக்களின் வரலாறு,
காணாமல் போன கோவையின் முதல் பள்ளிவாசல்,
சிறுவாணி கொண்டு வந்த முதல் முஸ்லிம்,
கோயில்களுக்கு இடம் வழங்கியவர்கள்,
வேகன் டிராஜிட்டி மாப்பிள்ளா போராளிகள்,
திப்புவின் ஆயிரம் கோடி சொத்துக்கள்,
மஸ்ஜித் அக்ஸா எரிப்பு சிதம்பரம் பூங்காவில் ஓர் அணியில் திரண்ட முஸ்லிம்கள்,
200 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் இஸ்லாமிய இலக்கிய ஒலைச்சுவடுகள்,
அப்பளம் போல் நொரறுங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான மார்க்க கிரந்தங்கள்

இது போன்ற ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தகவல்கள்

எந்த ஒரு சமுதாயம் தன் தொன்மை வரலாற்று பெருமையை மறந்துவிட்டதோ அந்த அளவிற்கு அது தன்னையே மறந்து விட்ட சமுதாயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, நமது இந்த நாட்டில் மறைந்து போன நம் வரலாற்று பதிவுகளை எதிர்கால சந்ததியர்களுக்கு வழங்க வேண்டியது நமது மஹல்லா ஜமாஅத்துக்கள் தன்னார்வ முஸ்லிம்களின் பொறுப்பாகும்.

ஜனாப் அமீர் அல்தாப் அவர்களின் பெட்டகம் – 2013 – முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் படித்து பாதுகாக்க வேண்டிய முழு வரலாறு தரும் அற்புத பெட்டகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

கோவை முஸ்லிம்களின் வரலாற்று சம்பவங்கள் பற்றிய தகவல்கள் நீங்கள் பதிவு செய்ய விரும்பினால்;
தொடர்புக்கு –
alooralthaf@gmail.com
kovaisheriff@gmail.com
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தகவல் – P.s. Abdul Salam – idealvision

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *