நம் அன்றாட வாழ்வில் பலவிதமான ஆங்கிலச் சொற்களை அதற்கான தமிழ் சொற்களை அறியாமலேயே பயன் படுத்தி வருகிறோம். நம்மில் பலருக்கும் அந்த வார்த்தைகளுக்குரிய தமிழ் சொற்கள் தெரியாது என்பது தான் உண்மை. ஆகவே தான் இங்கு நாம் உபயோகித்து வரும் பல ஆங்கில சொற்களுக்கு நவீன தமிழ் சொற்களை பதிவாகத் தருகிறேன். நாமும் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்கலாமே! தேவையுள்ளோர் இதனை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
B – வரிசை
BABCHI SEEDS – கற்பகரிசி கற்பூரவரிசி
BACKBITING – புறங்கூறல்
BACTERIA – குச்சியம்/குச்சியங்கள்
BACKGAMMON – சொக்கட்டான்
BACKWATER – உப்பங்கழி, காயல், கடற்கழி
BACKYARD – புறங்கடை, புழக்கடை, கொல்லை
BACON – உப்புக்கண்டம்
BADMINTON BALL – பூப்பந்து
BADGE – வில்லை
BAKER – வெதுப்பகர்
BAKERY – அடுமனை, வெதுப்பகம்
BAIT – இரை
BALANCE SHEET – ஐந்தொகை
BALCONY – மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை
BALL – பந்து
BALL BADMINTON- பூப்பந்தாட்டம்
BALL BEARING – மணித்தாங்கி
BALL-POINT PEN – (பந்து)முனை எழுதுகோல்
BALOON – வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு
BANDAGE – கட்டு
BANK (MONEY) – வைப்பகம்
BANK (RIVER) – ஆற்றங்கறை
BANNER – பதாகை
BANYAN TREE – ஆலமரம்
BAR (DRINKS) – அருந்தகம்
BAR CODE – பட்டைக் குறியிடு
BARBER – நாவிதன்
BARBADOS CHERRY – சீமைநெல்லி
BARGAIN – பேரம் பேசு
BARIUM – பாரவியம்
BARK (TREE) – மரப்பட்டை
BARLEY – வால்கோதுமை
BARRACUDA – சீலா மீன்
BARRISTER – வழக்குரைஞர்
BASE PAY – தேக்கநிலை ஊதியம்
BASEBALL – அடிப்பந்தாட்டம்
BAT (ANIMAL) – வவ்வால்
BAT (SPORT) – மட்டை
BATALLION – பட்டாளம்
BATH-TUB – குளியல் தொட்டி
BATTLE-FIELD – போர்க்களம், செருக்களம்
BATSMAN (CRICKET) – மட்டையாளர்
BATTER (BASEBALL) – மட்டையாளர்
BAY – விரிகுடா
BEAM – உத்திரம்
BEAVER – நீரெலி
BEE’S WAX – தேன்மெழுகு
BEER – தோப்பி
BEETROOT – செங்கிழங்கு
BELLY-WORM – நாங்கூழ், நாங்குழு
BELT (WAIST) – இடுப்பு வார்
BERRY – சதைக்கனி
BERYLIUM – வெளிரியம்
BIBLE – வேதாகமம்
BICEPS BRANCHII MUSCLE – இருதலைப்புயத்தசை
BICEPS FEMORIS MUSCLE – இருதலைத்தொடைத்தசை
BICEPS MUSCLE – இருதலைத் தசை
BICYCLE – மிதிவண்டி,
BILBERRY – அவுரிநெல்லி
BILE – பித்தம்
BILL – விலைப்பட்டியல்
BILLIARDS – (ஆங்கிலக்) கோல்மேசை
BILLION – நிகற்புதம்
BINOCULAR – இரட்டைக்கண்நோக்கி
BISCUIT – மாச்சில்
BISMUTH – அம்பரை, நிமிளை, மதுர்ச்சி
BISON – காட்டேணி
BIT – துணுக்கு
BLACK – கருப்பு, கார்
BLACK GRAM – உளுத்தம் பருப்பு
BLACK EYED PEAS – வெள்ளை காராமணி
BLACKBERRY – நாகப்பழம்
BLACKBUCK – வேலிமான்
BLACKSMITH – கொல்லர்
BLADE – அலகு
BLEACHING POWDER – வெளுப்புத் தூள், வெளிர்ப்புத் தூள்
BLENDER – மின்கலப்பி
BLISTER PACK – கொப்புளச் சிப்பம்
BLUE – நீலம்
BLUEBERRY – அவுரிநெல்லி
BLUE VITRIOL – மயில்துத்தம்
BLUE-BELL – நீலமணி
BLUNT – மொண்ணையான, மொண்ணையாக
BLOOD VESSEL – குருதி நாடி, ரத்தக் குழாய்
BLOTTING PAPER – உறிஞ்சுதாள்
BOA (CONSTRICTOR) – அயகரம்
BOAT – தோணி, படகு
BOAT HOUSE – படகுக் குழாம்
BOILER – கொதிகலன்
BODYGUARD – மெய்க்காப்பாளர்
BOMB – வெடிகுண்டு
BONE, BONE MARROW – எளும்பு, மஜ்ஜை
BOOK – புத்தகம், நூல்
BOOK-KEEPING – கணக்குப்பதிவியல்
BOOMERANG – சுழல்படை
BOOT (FOOTWEAR) – ஜோடு
BOTHERATION – உபாதை
BORAX – வெண்காரம்
BORDER – எல்லை
BOREDOM – அலுப்பு
BOREWELL – ஆழ்குழாய் கிணறு
BORING – அலுப்பான
BORON – கார்மம்
BORROW – இரவல் வாங்கு
BOTTLE GOURD – சுரைக்காய்
BRAILLE – புடையெழுத்து
BRAKE – நிறுத்தான், நிறுத்தி
BRASS – பித்தளை
BRASSIERE – மார்க்கச்சு
BRAVADO – சூரத்தனம்
BREAD – ரொட்டி
BREWER’S YEAST – வடிப்போனொதி
BRIEFCASE – குறும்பெட்டி
BRIDGE – பாலம், வாராவதி
BRINJAL – கத்திரிக்காய்
BRITTLE, BRITTLENESS – நொறுங்கும், நொறுங்குமை
BROADBAND, BROADBAND CONNECTION – அகண்ட அலைவரிசை, அகண்டலைவரிசை இணைப்பு
BROCCOLI – பச்சைப் பூக்கொசு
BROKEN BEANS – மொச்சைக் கொட்டை
BROKER – தரகர்
BROKERAGE FIRM – தரககம்
BROMINE – நெடியம்
BRONZE – வெண்கலம்
BROOCH – அணியூக்கு
BRUISE – ஊமையடி
BRUSSELS SPROUTS – களைக் கோசு
BUBBLE WRAP – குமிழியுறை, குமிழிச் சிப்பம்
BUBONIC PLAGUE – அரையாப்பு(க்கட்டி)க் கொள்ளைநோய்
BUDGET – பொக்கிடு (வினை), பொக்கீடு
BUG (SOFTWARE) – இடும்பை
BUGLE – ஊதுகொம்பு
BULB (ELECTRIC) – மின்குமிழ்
BULLDOZER – இடிவாரி
BUN – மெதுவன்
BUNDLE – பொதி
BUOY (OF AN ANCHOR) – காவியா, காவியக்கட்டை
BURIAL URN – முதுமக்கள் தாழி
BURNER – விளக்குக்காய்
BUS – பேருந்து
BUS STOP – பேருந்து தரிப்பு, பேருந்து நிறுத்தம்
BUSH – புதர், பற்றை
BUSH (MECHANICAL) – உள்ளாழி
BUSINESS VISA – வணிக இசைவு
BUSY – வேலையாக/கம்மக்கையாக, வேலையான/கம்மக்கையான
BUTTER – வெண்ணெய்
BUZZER – இமிரி
Thanks to Tamildictionary