போரடிக்குது…………………… – புதுசுரபி

போரடிக்குது…………………… -புதுசுரபி அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள். ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார். “ஒண்ணுமில்லே,ரொம்ப ‘போர்’ அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாடவேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னார். “நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு ‘போர்’ அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல” […]

Read More

இன்னும் மூன்று நாட்களி்ல் ….

                       ( பாத்திமுத்து சித்தீக் ) தனித்திருந்தும், விழித்திருந்தும் இறைவனை வணங்கி, ஓதித் தொழுது வந்த ஒரு மகான் ஒருவர் தன் தவப் பயனை மனிதர்களின் குறைகளைக் கேட்டு, உபதேசித்து சேவை செய்து கொண்டிருந்தார். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாயிருந்த சிறுகுடிலில் வசித்து வந்த இந்த ஞானியின் புகழ் திக்கெட்டும் பரவிக் கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தனாயிருந்த மனிதன் மகாக்கஞ்சன் நிறைய பொன்னையும், பொருளையும் குவித்து வைத்திருந்ததால் நிம்மதியாக உறங்கக் கூட முடியாமல் தவித்தான். அவ்வப்போது […]

Read More

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?

கான் பாகவி     கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான். ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல்ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும்தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லதுசட்டத்தின் (Act) பெயராகும். பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். […]

Read More

இராமநாதபுரம் அரண்மனை வரலாறு

காலப்பெட்டகம்   இராமநாதபுரம் அரண்மனை வரலாறு ( அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் )   இராமநாதபுரம் அரண்மனையை சுற்றி பாதுகாப்புக்காக 44 கொத்தளங்கள் கட்டப்பட்டன. கிழவன் சேதுபதி காலத்தில் தான் இவை கட்டப்பட்டன. (காலம் 1678 – 1710). அரண்மனை நிர்வாகத்திற்காக (தர்பார் மண்டபம்) பக்கத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதற்கு இராமலிங்க விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆட்சி செய்த மன்னர்கள் தினசரி இங்கே மக்களை சந்திப்பார்கள். விளையாட்டு வீரர்கள், கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள், புலவர்கள் […]

Read More