மயிலும் குயிலும் – ஈரோடு கதிர்

  படம் : இணையத்தில் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டிருக்கியா! வெல்லம் போட்ட கச்சாயம் தின்னிருக்கியா! எங்க வீட்டுப் பக்கம் ’பிக் சிக்’ இருக்கு! எங்க வீட்ல நாட்டுக்கோழி இருக்கு! அங்கே மேரிப்ரவுன் கூட இருக்குதே! எங்க அப்பத்தா கல்லக்கா சுட்டுத்தருமே! குஷி ரைட் செமையா இருக்குமே! ஆலமரத்துல தூரி ஆடியிருக்கியா! சம்மர்க்கு தீம்பார்க் போவோமே! மொட்டக் கெணத்துல நீச்சலடிப்போமே! ஷாப்பிங் போவோம் தெரியுமா! சனிச் சந்தைக்கு போவோம் தெரியுமா! எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கு! எங்கூட்ல புதுப் பானையிருக்கு! வெஜிடபுள்ஸ்க்கு கூட ஏசி மார்ட்தான்! நாங்க காட்டுலயே பொறிச்சுக்குவோம் நூடுல்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! பழம் சக்கரை போட்ட சந்தவை ரொம்பப் பிடிக்கும்! அப்பா பீட்சா வாங்கிட்டு வருவாரே! சாணி காடை முட்டை உருண்டையில சுட்டு திம்பமே! எங்க வீட்டுல பொமரேனியன் டாக் இருக்கே! எங்க வீட்டுல ரெண்டு எருமை இருக்கே! ஸ்விம்மிங் கிளாஸ் போலாம்னு இருக்கேன் வாய்க்கால்ல […]

Read More

நெஞ்சம் மறப்பதில்லை … மெளலானா அப்துல் வஹாப் எம்.ஏ,பி.டி.எச்.!

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான “தித்திக்கும் திருமறை” எனும் நூலில் விளக்கியுள்ளார். கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். திருக்குர்ஆன் பூவுலகில் இறங்குவதற்குக் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் இருந்தன. மிருதுவான சுபாவம், […]

Read More

நிக்காஹ் குத்பா

  (இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன், அவனிடமே உதவி தேடுகிறேன், அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனையே விசுவாசிக்கிறேன், அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்கிறேன். அந்த அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவனை யாரும் வழி கெடுக்க […]

Read More

பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

  ( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )   ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு போல” இதுபோன்ற சில சொற்களைக் கூறிவிட்டால் இனிமேல் அந்த மனைவியுடன் அந்தக் கணவர் சேர்ந்து வாழத் தகுதி இழந்தவர். இந்தக் காலத்தில் “தலாக்” செய்வதற்கு இணையான செயல் […]

Read More

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது …….

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்…. அவர்களுக்காக ….. 1.முதல் தக்பீருக்குப் பின், … _____________________________ முதல் தக்பீர் கூறிய பின் …. அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின், _______________________________ இரண்டாம் தக்பீர் கூறிய பின் …… நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா […]

Read More

நேர் நேர் தேமா -கோபிநாத் 21-சாதனையாளர்களின் நேர்காணல்கள் !

கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்கம் 192, விலை ரூ. 100 Dial For Books – 94459 01234 | 9445 97 97 97 ‘அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன்’ என்ற சாலமன் பாப்பையா தொடங்கி, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், கே.பாலசந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேஷ்டி சட்டை. இதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதைப் பெருமையாக […]

Read More

உறவுப் பாலம்

  முதுவை முஹ்ஸின் ( இரண்டு உண்மைகள் )   அப்போது நான் திருநெல்வேலியில் உயர்நிலைப்பள்ளி மாணவன். முழு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறையில் விடுதியிலிருந்து ஊர் வந்து கொண்டு இருக்கிறேன். வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, கதைப்புத்தகங்கள் எதுவுமே நாங்கள் படிக்கக் கூடாது. பள்ளிக்கூடப் புத்தகங்கள் தவிர எந்தப் புத்தகங்களும் எங்களிடம் இருக்கக் கூடாது. இது எங்கள் விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. மாணவர்கள் பள்ளிப் படிப்பிலே மட்டும் கவனமாயிருக்க வேண்டும் என்ற நல்லார்வத்தில் ஏற்படுத்தப்பட்ட […]

Read More

வஹியாய் வந்த வசந்தம்

( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் )   வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) வந்துரைக்க வஹியாக தேன்மறையைப் பெற்றவரே ! தீரர் நபி நாயகமே !   சஞ்சலங்கள் பல சூழ்ந்தும் சாபமிடாச் சந்தனமே ! நெஞ்சொளிரும் மாமணியே ! நேச நபி நாயகமே !   பல்லிளித்துக் கையேந்தும் பழக்கத்தை விட்டொழித்துக் கல்லுடைத்தும் கூழ் குடிக்க கற்பித்த நாயகமே !   நிலுவையிலும் அளவையிலும் நேர்மையினைக் கையாளல் உயர்ந்ததென நவின்றிட்ட உத்தமரே ! நாயகமே ! […]

Read More

உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

  ( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள் எழில்மனு வாழ்வின் படிகள் பலன்கள்   எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை எண்ணங்க ளெல்லாம் […]

Read More