மயிலும் குயிலும் – ஈரோடு கதிர்

இலக்கியம் கவிதைகள் (All)

mayil

 

படம் : இணையத்தில்

சிக்கன் பப்ஸ்

சாப்பிட்டிருக்கியா!
வெல்லம் போட்ட
கச்சாயம் தின்னிருக்கியா!
எங்க வீட்டுப் பக்கம்
’பிக் சிக்’ இருக்கு!
எங்க வீட்ல
நாட்டுக்கோழி இருக்கு!
அங்கே மேரிப்ரவுன் கூட
இருக்குதே!
எங்க அப்பத்தா
கல்லக்கா சுட்டுத்தருமே!
குஷி ரைட்
செமையா இருக்குமே!
ஆலமரத்துல
தூரி ஆடியிருக்கியா!
சம்மர்க்கு
தீம்பார்க் போவோமே!
மொட்டக் கெணத்துல
நீச்சலடிப்போமே!
ஷாப்பிங் போவோம்
தெரியுமா!
சனிச் சந்தைக்கு போவோம்
தெரியுமா!
எங்க வீட்ல
ஃப்ரிட்ஜ் இருக்கு!
எங்கூட்ல
புதுப் பானையிருக்கு!
வெஜிடபுள்ஸ்க்கு கூட
ஏசி மார்ட்தான்!
நாங்க காட்டுலயே
பொறிச்சுக்குவோம்
நூடுல்ஸ் எனக்கு
ரொம்பப் பிடிக்கும்!
பழம் சக்கரை போட்ட
சந்தவை ரொம்பப் பிடிக்கும்!
அப்பா பீட்சா
வாங்கிட்டு வருவாரே!
சாணி காடை முட்டை உருண்டையில
சுட்டு திம்பமே!
எங்க வீட்டுல
பொமரேனியன் டாக் இருக்கே!
எங்க வீட்டுல
ரெண்டு எருமை இருக்கே!
ஸ்விம்மிங் கிளாஸ்
போலாம்னு இருக்கேன்
வாய்க்கால்ல
சம்மர் சாட் அடிப்பனே!
நகரத்து மயிலுக்கும்
கிராமத்து குயிலுக்கும் நடந்த
நிதர்சன வாள் வீச்சுகளில்
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தேன்!
வெற்றி தோல்வி தரவல்லாத
மொண்ணை ஆயுதங்கள்
தாங்கியவனாய்!
-0-




கசியும் மௌனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *