“அஸ்கான்” புகழ் வாழ்க !

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

 

அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் !

அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம் ஆகிறது !

நில்லாத புகழுடைய அல்லாஹ்வின் அருளாலே

நிஃமத்தாய் நிற்கின்றார் “எம்-டி காக்கா” ஸ்லாஹுத்தீன் !

 

“மாமிலாத்தா” நாச்சியாரின் சிப்பியிலே பூத்தமுத்து !

மகிமையுடன் “கண்ணாடி வாப்பா” அப்துல்ஹமீத் வார்த்தமுத்து !

பூமணக்கும் “கொழும்புக்குடம்” ஷேக்கப்துல் காதர் பெற்ற

பெண்ணரசி “நஜீமா” வை வாழ்க்கையில் சேர்த்த சொத்து !

 

தகைமையுடன் “ப்ரவசி பாரதிய சம்மன்” என்னும்

தலைசிறந்த தொழிலதிபர் பட்டயத்தைப் பெற்று நிற்கும்

மிகையுடைய பாரதத்தின் மிடுக்கான புகழ்மகனே !

மாண்புமிகு குணமகனே ! “மகிமைக்கரைக்” குடிமகனே !

 

இந்தியத்தாய் ஈன்றெடுத்த ‘ஞானக்கனி’ கலாமுடைய

ஏற்றமிகு கரங்களினால் பட்டமிதைப் பெற்றதனால்

இந்தியர்கள் மட்டுமல்ல ஏற்றமிகு நாட்டவரும்

இதயத்துள் உமைவைத்துப் போற்றுகிறார் ! புகழுகிறார் !

 

தோன்றினால் புகழோடு தோன்றும்படி வள்ளுவனோ

தூரிகையில் வடித்தபோதே தோன்றிவிட்டாய் பெருமகனே !

ஆன்றோர்கள் சான்றோர்கள் அனைவருமே போற்றுகிற

ஆற்றல்பல பெற்றாயிரம் ஆண்டுபல வாழியவே !

 

காசுக்கும் பணத்துக்கும் பதவிபட்டம் வாங்குகிற

காலமிதில், இப்பதவி உம்மடியில் விழுந்தபோது

நேசமுடன் ஏற்றுநிற்கும் தகுதிமிகு தலைமகனே !

நீர்வாழ்க ! உம் நிழலில் ‘அஸ்கானின்’ புகழ் வாழ்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *