ரமலான்

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

        ( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை )

 

இறைவன் அருளும் அன்பும் இணைத்து

இனிதாய் ரமலான் வருகிறது ! – அது

கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக்

கோடிநல் அருளைத் தருகிறது !

கோமான் அருளைத் தருகிறது !!

 

 

துஷ்ட்டக் குருவாம் ஷைத்தான் கரத்தில்

தடையாய் விலங்கை இடுகிறது ! – அது

இஷ்ட்டப் படியிவ் வுலகில் திரியும்

இழினிலை யெல்லாம் தடுக்கிறது !

இகழ்வுகள் எல்லாம் தடுக்கிறது !!

 

 

இருளே சூழந்த நரகக் கதவை

இழுத்தே அடைத்து விரைகிறது ! – பெரும்

அருளே பொங்கும் சுவனக் கதவை

அழகாய்த் திறந்து வருகிறது !

அருளாய்த் திறந்து வருகிறது !!

 

 

இலட்சம் நலனை நம்மில் இணைக்க

(இ) “லைலத்துல் கத்ரை” த்தருகிறது ! – தூய

இலட்சியம் தேடும் பக்தர்கள் மனதில்

இலாபக் கருணை பொழிகிறது !

இலாபக் கிருபை பொழிகிறது !!

 

 

துன்பம் துயரம் விளைக்கும் வித்தைத்

தூர்த்தே அழித்து வருகிறது ! – பெரும்

இன்பம் கோடிக் கோடிகள் விளைத்து

இனிதாய் ரமலான் வருகிறது !

இன்புறு ரமலான் வருகிறது !!

 

 

ஆயிரம் ஆயிரம் பாவச் சுமையை

அழித்திட ரமலான் வருகிறது ! – பெற்ற

தாயினும் மேலாய்க் கருணை நிறைந்த

தனியோன் அருளைத் தருகிறது !

தலைவன் அருளைத் தருகிறது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *