வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

இலக்கியம் கவிதைகள் (All)

www.vidhyasaagar.com

 

1
ருத்துவர் சொல்கிறார்
உப்பு சேர்க்கக்கூடாதாம்
சர்க்கரையை விஷம்போலெண்ணி
ஒதுக்கிவிடவேண்டுமாம்
காரம் கூடவேக் கூடாதாம் –

வேறென்ன சமைப்பாள் எனக்காக
என் மனைவி ?

ஒரு சொட்டுக் கண்ணீரை
விடுவாள்…

கண்ணீரின் ஈரத்தில்
கடக்கிறதென் காலம்..
——————————————————————-

2
பொ
துவாக
எல்லோரும் வாழ்த்தும்போது
நூறாயுசு என்று வாழ்த்துவார்கள்

இந்த மனித ஜென்மங்களோடு
நூறு வருடம் வேறு தேவையா என்று நினைப்பேன்

வெயிலில் வற்றிப்போன
குளம்போல –
இப்போதெல்லாம் உயிர்ப்பிற்கான நாட்களை
மாத்திரைகள் தின்று வருகின்றன

நானும்
மனிதர்களோடு நெருங்கி வாழும் ஆசையில்
மருத்துவர் சொல்லும்படியெல்லாம்
கேட்கிறேன்

மரணம் கடைசியில்
யார் சொல்வதைக் கேட்குமோ…
——————————————————————-

3
ந்த ஜன்னல் கம்பிகளின்
வழியேப் பார்த்தவாறு
சுவரருகில் நிற்கிறேன்

வெளியே பறக்கும் பறவைகளுக்கு
மாத்திரை மருந்துப் பற்றியெல்லாம்
கவலையிருக்கப் போவதில்லை

எனக்குண்டு
மாத்திரைகளால் விடும் மூச்சு
என் மூச்சு

மின்சாரத்தில் எரியும்
விளக்கைப் போல
மாத்திரைகளில் ஒளிரும் நிலவு நான்;

ஒரு நாள்
மாத்திரையோ
மாத்திரைக்குப் பணமோ
அல்லது நானோ இல்லாமல் போகலாம்

அப்போதும் வெளியே
பறவைகள் பறக்கும்
ஜன்னலின் வழியே ஒளிரும் நிலவு தெரியும்
ஒரு விளக்கு எனக்காகவும் எரியும்!!
——————————————————————-
வித்யாசாகர்

 

 

 

தொடர்புகளுக்கு..

தமிழகமுகவரி..

வித்யாசாகர்
11, சூர்யா தோட்டம்
குதிரை குத்தித் தாழை
மாதாவரம் பால்பண்ணை
சென்னை – 600051
தொலைப்பேசி: 25942837

 

 

குவைத்திய முகவரி..

வித்யாசாகர்
09, மூன்றாவது மாடி,
கட்டிட எண்: 35
37 – வது தெரு, பஹாஹீல்,
பகுதி: 8, குவைத்

தொலைப்பேசி: +965 67077302

மின்னஞ்சல் முகவரி: vidhyasagar1976@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *