நல்லி -திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு

இலக்கியம் கட்டுரைகள்
மொழியாக்கப் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் நல்லி- திசை எட்டும் விருதுகளுக்கு, படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என “திசை எட்டும்’ காலாண்டிதழ் அறிவித்துள்ளது.

இது குறித்து “திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:- மொழியாக்கப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், “திசை எட்டும்’ இதழின் தலைமைப் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் நிறுவியுள்ள நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் மூன்று,

ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்கள் மூன்று என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்படும்.
இவற்றுக்கு தலா ரூ. 15ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்காத மூத்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவருக்கு வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.  அவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மொழியாக்கத் துறையில் ஊக்கப்படுத்தும் விதத்தில் மொழியாக்கப் போட்டி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் திட்டத்துக்கு மொத்தப் பரிசுத் தொகை ரூ.35,000.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில், விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2008-2012) வெளியான தங்களின் நூல்களின் மூன்று பிரதிகளை

ஆசிரியர், 
திசை எட்டும்,
 6, பிள்ளையார் கோயில் தெரு, 
மீனாட்சிபேட்டை, 
குறிஞ்சிப்பாடி-
 607302 
 
என்ற முகவரிக்கு வரும் மே 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 04142-258314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *