தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு

இலக்கியம் நூல் அறிமுகங்கள்

அன்புள்ள நண்பர்களே,

 
வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்து!
 
எங்கள் புத்தக (“The Earliest Missionary Grammar of Tamil”) வெளியீடு பற்றிக் கிறித்துவப் புனித ஞாயிறன்று தெரிவித்திருந்தேன்.
 
அந்தப் புத்தகத்தை எழுதிய பின்னணியையும் எழுதி முடித்து வெளியிடுவதற்குள் நேரிட்ட பல சிக்கல்களையும் ஒரு தொடராக எழுத வேண்டிய தேவை இருந்தது. அந்தத் தொடரை முடித்துவிட்டேன். 
 
 
****************************************************************************************************
விரும்பினால் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்: 
 
3. http://mytamil-rasikai.blogspot.com/2013/03/3.html (இலக்கணத்தின்/கையேட்டின் அமைப்பு)
4. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/4.html (மொழிபெயர்ப்பு முயற்சி)
5. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/5.html (புத்தக முயற்சிச் சிக்கல்)
6. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/6.html (புத்தக வெளியீட்டு முயற்சி – 1)
7. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/7-2.html (புத்தக வெளியீட்டு முயற்சி – 2)
8. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/7-3.html (புத்தக வெளியீட்டு முயற்சி – 3)
9. http://mytamil-rasikai.blogspot.com/2013/04/blog-post.html (ஏன் படிக்க வேண்டும்?)
****************************************************************************************************
 
இந்தப் புத்தகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட கணினித் தமிழ் எழுத்துக் கோவைகள் தேவை என்று உதவி வேண்டினேன். நண்பர்கள்மணிவண்ணன், ஶ்ரீரமணசர்மா, மதுரை உதயசங்கர், வினோத் ராஜன்எல்லாரும் உடனடியாக உதவி செய்தார்கள். ஆனால், கணினிப் பொருத்தம் இல்லாமல் உடனடியாக அவர்கள் உருவாக்கிய எழுத்துக் கோவையைப் பயன்படுத்த இயலவில்லை. அவர்களுடைய உதவி செய்யும் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றி.
 
பல சிக்கல்களுக்கு இடையே உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம் எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் மன நிறைவையும் கொடுத்திருக்கிறது. ஜீன் அம்மையாருக்குத்தான் மறதிநோய்க் (Alzhiemer’s disease) கொடுமையால் இதெல்லாம் புரியவில்லை. (கடந்த 4 ஆண்டுகளாக நானே தனியாக உழைக்க வேண்டி வந்தது.) அது கிடக்க, இப்போது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற என் மனநோவு மிகவும் கொடுமை. என்ன செய்ய. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்போல.
தமிழ்நாட்டின், தமிழ் மொழியின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையைத் தெரிவிக்கும் கையேடு அன்றீக்குப் பாதிரியாரின் கையேடு. இயன்றவர்கள் கட்டாயம் எங்கள் புத்தகத்தை வாங்கிப் படிக்கவும். 
நன்றியுடன்,
ராஜம்
rajam@earthlink.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *