கனவின் வகைகள் மூன்று

இலக்கியம் கட்டுரைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கனவு மூன்று வகை உண்டு 1.அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ள
சுபச்செய்தியுடைய நல்லகனவு. 2.ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ள
துக்கம்,(பயமுறுத்தாட்டும்)கனவு.3.மனிதன் பேசிக்கொள்கின்ற வற்றிலிருந்து
வருகின்ற கனவு.

உங்களில் ஒருவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் கண்டால் எழுந்து (உடனே)
தொழட்டும் அதை யாரிடமும் கூற வேண்டாம்..என நபி (ஸல்)அவர்கள்
கூறியுள்ளார்கள்)(முஸ்லிம்-2263 )
——————————————————————————–

உங்களில் ஒருவர் கனவு கண்டால் அது அவருக்கு விருப்பமானதாக இருந்தால்
அது அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து வந்ததாகும்.எனவேஅதற்காக அல்லாஹ்வை அவர்
புகழட்டும்.தான் விரும்பியவருக்கு(மட்டும்)
அதை தெரிவிக்கட்டும்.அவர் வெறுக்கின்ற ஒன்றை கனவில் கண்டால் அது
ஷைத்தானுடைய புறத்திலிருந்து வந்ததாகும்.அதன் தீங்கிலிருந்து
அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரட்டும்.அதை யாரிடமும்
கூற வேண்டாம்.அவருக்கு அதனால்  எந்த இடையூறும் வராது.என நபி (ஸல்)அவர்கள்
கூறியுள்ளார்கள் நூல்( புகாரி,ரியாழுஸ்ஸாலிஹீன்.)
——————————————————————————–

மேலும் ஒரு ஹதீஸில் உங்களில் ஒருவர் தீய கனவு கண்டால்அவூது பில்லாஹி
மினஷ்ஷைதாநிர்ரஜீம்
என்று மூன்று முறை சொல்லி  இடது புறமாக மூன்று முறை (எச்சில்
இல்லாமல்)துப்பிகொள்ளட்டும். ஊதிக்கொள்ளட்டும். மேலும் எந்தபக்கமாக அவர்
படுத்திருந்தாரோ அதிலிருந்து வேறு பக்கத்தில் திரும்பி
படுத்துகொள்ளட்டும். என்று நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள் நூல்(
இப்னுமாஜா-3908 )
——————————————————————————–

ஒரு மனிதனின் கனவு ,அதற்கு விளக்கம் சொல்லபடாத காலம் வரை
தொங்கிக்கொண்டு(நிலுவையில்) இருக்கும்.அதற்கு விளக்கம்
சொல்லப்பட்டுவிட்டால் அது நிகழ்ந்து  விடும்.என்று நபி (ஸல்)அவர்கள்
கூறியுள்ளார்கள்( இப்னுமாஜா 3914)
——————————————————————————–

மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸ்களிலிருந்து கனவு மூன்று  வகை உண்டு என்பது தெளிவாகிறது.

முதல் வகை:

நல்ல கனவு.இது அல்லாஹ்வுடைய புறத்திலிருந்துமுள்ளது.நல்லகனவை கண்டால்
அதன் நன்மையை அல்லாஹ்விடம் கேட்பதோடு நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும
சொல்லவேண்டும்.

இரண்டாவது வகை:

தீய கனவு.இது ஷைத்தானுடைய புறத்திலிருந்துமுள்ளது.வெறுக்கின்ற
அல்லதுபயப்படும்படியான  கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம்
பாதுகாப்பு கேட்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.மற்ற யாரிடமும் அதை
கூறவோ விளக்கம் கேட்கவோ கூடாது .அப்படி ஒரு வேளை விளக்கம் கேட்க
விரும்பினால் நல்ல விளக்கம் தெரிந்த ஆலிமிடம் மட்டும் தான் கேட்க
வேண்டும்.அரைகுறை விளக்கத்தை யாராவது கூறினாலும் பலித்து விட வாய்ப்பு
இருக்கின்றது.

மூன்றாவது வகை:

இரவில் இராக்கதை பேசிவிட்டு உறங்கச் செல்வதனால் வரும் கனவு.அல்லது தொலைக்
காட்சியைப் பார்த்து விட்டு உறங்கச் செல்வதானால் வரும் கனவு.
இதன் விளக்கத்தை யாரிடமும் கேட்காதவரை இதை பெரிது படுத்தத்
தேவையில்லை.அரைகுறை விளக்கத்தை யாராவது கூறினாலும் அதுவும் பலித்து விட
வாய்ப்பு இருக்கின்றது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.நேரான பாதையில் வாழச் செய்வானாக.ஆமீன்.

அல்லாஹ்வே அனைத்தையும் நன்கு அறிந்தவன்.

மௌலவி:சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில்மன்பஈ
தேரிருவேலி(ஷார்ஜாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *