மே தின சிறப்புக் கவிதை

  இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் )     ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப் பஞ்சுத் தலையுடனே வேப்பமரத் தடியினிலே ………     பருப்பு மசால் வடையினைப் பாட்டி பாங்குடன் சுட்டனளே ! – வாசமதை இருப்புக் கொள்ள முடியாமலே வடை ஒன்றை வாய்விட்டுக் காகம் கேட்டதே !     காசேதுமில்லாமல் வடை லேசாய் கிட்டிடுமா ? என்றனள் – பாட்டி […]

Read More

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்’ என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் […]

Read More

சரித்திர நாவல்கள்-(2012 வெளியானது வரை)

அய்க்கண்_அதியமான் காதலி அய்க்கண்_இளவெயினி அய்க்கண்_கரிகாலன் கனவு அய்க்கண்_நெய்தலில் பூத்த குறுஞ்சி அய்க்கண்_நெல்லிக்கனி அய்க்கண்_ஊர்மிளை அகிலன்_கயல்விழி அகிலன்_வேங்கையின் மைந்தன் அகிலன்_வெற்றித்திருநகர் அமுதா கணேசன்_பொன் மயிலின் கதை அமுதா கணேசன்_தஞ்சை இளவரசி அண்ணாமலை . கே_செஞ்சித் தளபதி அண்ணாமலை எம். _குருதிச்சோறு அண்ணாமலை. எம். கருப்பூர்_பல்லவன் பாவை அனுஷா வெங்கடேஷ்_காஞ்சித் தாரகை அனுஷா வெங்கடேஷ்_காவிரியின் மைந்தன் அனுஷா வெங்கடேஷ்_தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் அரசு_கோபெருஞ்சோழர் அரசுமணி .க_பல்லவர் கதைகள் அறிஞர் அண்ணா_இரும்பாரம் அறிஞர் அண்ணா_இரும்பு முள் வேலி அறிஞர் அண்ணா_கலிங்க ராணி […]

Read More

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்

கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள் ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ? அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்!   தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு ஓராயிரம் புலவர் இங்கே தோன்றிடலாம்! ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக – தமிழ் வாழ்ந்ததற்கு அடையாளம் திருக்குறளே!!   உலகமெங்கும் பரவிநிற்கும் நூலிது என்பதை உணர்ந்தவன் வள்ளுவன் எனலாமா? உலகவாழ்வின் சூத்திரங்கள் சுருங்கச்சொல்லி பொருள்நிறைந்த பொக்கிஷத்தைப் படைத்தாரே!   எந்தவொரு நாட்டினர்க்கும் பொதுவாக எழுதுவது அப்படியொன்றும் எளிதில்லை! எடுத்தியம்பும் கருத்தெல்லாம் […]

Read More

திருக்குறள் தேசிய மாநாடு

கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள் கவிதையை அனுப்பவும்… அனுமதி இலவசம்! அனுப்பவேண்டிய முகவரி: ezuttholai@gmail.com அல்லது, க.ச.கலையரசன், கவிஞன் குரல் பதிப்பகம் எண்:1 நேரு நகர், மன்னுர்ப்பேட்டை, சென்னை – 600050. விதிமுறைகள்: கடைசிநாள்: 15.05.2013 அனுப்பும் கவிஞரின் முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் மறக்காமல், மறுக்காமல் குறிப்பிடவும்.. எழுத்தோலை […]

Read More

திருக்குறளே தேசிய நூல்

    பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார்.   திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர் இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான் பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும் குறுக்கிப் புகுத்தியசெம் பா.   இல்லாத தொன்றில்லை இப்புவியோர் என்றென்றும் நல்வழியில் பாதம் நிலைநிறுத்த – வெல்லாச்சொல் கோத்தளித்தார் வள்ளுவனார் கோனானார் ஊழிவரை பாத்தமிழ் செய்வாருள் தான்.   பன்மொழிகள் தம்வசமாய்ப் […]

Read More

உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?

    இப்போது குளிர்பானங்கள் அருந்துவது நாகரிமாகி விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும். குறிப்பாக விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாகப் பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உண்மையில் இந்தக் குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுதான் விளைவிக்கிறது. இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது. பென்ஸாயிக் என்ற இந்த […]

Read More

ஆக்கத்திறன் வளர்க்க அரிய ‘யோசனைகள்!!

வேலை பார்க்காமல் வாழ்வு இல்லை. வேலையை பெறுவது முக்கியமல்ல, கிடைத்த வேலையை திறம்பட செய்துமுடிப்பதே முக்கியம். அப்போது தான் மேலும் மேலும் வெற்றிகள் நம்மை வந்து சேரும். வெற்றியை அடைய கடினஉழைப்பு மட்டுமா முக்கியம்? இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும்சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன்? ஆக்கத்திறனால். ஆம், ஒருவனுடையஆக்கத்திறன் தான் அவனின் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒரு உண்மையை சொல்லுங்கள்…அதிகப்படியானஆக்கத்திறன் கொண்டவர்களை காணும் போது அவர்களை கண்டு பொறாமையோ அல்லது அதிசயித்தோபோகிறோம் அல்லவா? சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்றுஎண்ணிப் பார்த்திருப்பீர்களா? அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா?வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து,சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா? குழம்பாதீர்கள். நல்ல ஆக்கத்திறனை நீங்கள்உங்களுக்குள் வளர்க்க கீழ்கண்ட ஒன்பது பழக்கவழக்கங்களை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள். அட்டவணைப்படி நடத்தல் பள்ளிக் காலங்களில் நமக்காக தயார் செய்த அட்டவணைக்கு ஒரு காரணம் உள்ளது.ஒரு நடைமுறையை உண்டாக்கி, வேலையை சரியான நேரத்தில், கொடுத்த கால நேரத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்யவே, இந்த அட்டவணை பயன்படுத்துகிறோம்.  ஒரு தினத்தை நல்ல முறையில்செலவழிப்பவர்கள், கண்டிப்பாக ஒரு அட்டவணையை தயார் செய்து, அதை முடிந்த வரையில்பின்பற்றியவர்களாகவே இருப்ப இலக்குகளில் தெளிவாக இருத்தல் தமக்குண்டான இலக்கை தாமே அமைத்து விட்டு, எதனை செய்து முடிக்கவேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் அன்றைய நாள், வாரம் மற்றும் மாதத்திற்கானகுறிக்கோள்கள் தெளிவாக இருக்குமாயின், அது செய்யும் வேளையிலும் அதன் வெளிப்பாட்டின் தரத்திலும்தெளிவாக பிரதிபலிக்கும். தினத்தை நல்ல விதமாக ஆரம்பித்தல் வேலையானது தங்கு தடையின்றி நன்றாக செல்வதற்கு, அன்றைய நாளைசிறப்பாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்குபுத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும். போதிய இடைவேளையை எடுத்தல் அதிக நேரம் அரட்டை அடிப்பதும் சரி, நேரத்தை விரையமாக்குவதும் சரி, பெரிய குற்றமே. இருப்பினும், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க குட்டிஇடைவேளை மிகவும் அவசியம். அதற்கு இடத்தை விட்டு எழுந்து ஒரு சிறு நடை செல்லலாம் அல்லது அலுவலகம்பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஐந்து நிமிடம் அமரலாம் அல்லது அலுவலக கட்டிடத்தை சுற்றி ஒரு நடைபோடலாம். இவ்வாறெல்லாம் செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஆர்வத்துடனும் வேலையைசெய்யலாம். சரியான இருக்கை நிலை ஆக்கத்திறனை அதிகரிக்க சரியான இருக்கை நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.உட்காருவதற்கும், ஆக்கத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது. மடிக்கணினி முன் தவறானகோணத்தில் அமர்ந்தால், சிறிது காலத்தில் கழுத்து வலியும், முதுகு வலியும் வருவது உறுதி. மேலும் சோம்பல்தோரணையுடன் அமர்வது, திரையை விட மிக கீழே குனிந்து வேலை பார்த்தல் அல்லது முதுகை அதிகமாகவளைத்தல் ஆகியவை சோம்பல் மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தும். ஆகவே இவைகள் கண்டிப்பாகஆக்கத்திறனை குறைக்கும் அல்லவா? சரியான சாப்பாட்டு அளவு அதிக சுறுசுறுப்பான மனதும், உடலும் வேண்டுமென்றால் ஆரோக்கியமான சாப்பாடுமிகவும் அவசியம். அதனால் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு ஊட்டச்சத்து நம்மிடம் உள்ளதோ அவ்வளவு ஆக்கத்திறன் ஒருவரிடம் அதிகரிக்கும். ‘வேண்டாம்’ என்ற வார்த்தையை கூறிப் பழகுதல் கெட்டப் பழக்கவழக்கங்கள் இழுக்கிறதா- ‘வேண்டாம்’ என்றுசொல்ல வேண்டும், அலுவலகத்தில் நேரத்தை விரயம் ஆக்கும் அழைப்புகள் வருகிறதா- ‘வேண்டாம்’ என்றுசொல்லவும். முக்கியமாக அரட்டை அடிப்பதற்கும், அலுவலக அமைப்பை குறை சொல்லுவதற்கும் அதிக நேரம்செலவிடும் உடன் வேலை செய்பவர்களுக்கு பெரிதாக ஒரு ‘வேண்டாம்’ என்று சொல்லி விட வேண்டும். இதில்ஈடுபடுவதால் விரயமாக போவது நேரமும் ஆற்றலும் தான். பதிலாக நேரத்தை வேலையை வேகமாக முடிப்பதில்செலவு செய்தால், அது தம்மைப் பற்றி தமக்கே ஒரு உயர்ந்த எண்ணத்தை தரும். தேவையான அளவு உடற்பயிற்சி வாழ்க்கையின் அனைத்து நன்மைக்கும் மூல மந்திரமாக விளங்குவதுஉடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதை பெறச் செய்யும். அதுவே வேலைகளில் கூடுதல்ஆக்கத்திறனை செயல்படுத்த உதவுகிறது. மகிழ்ச்சியுடன் இருத்தல் உறுதியான மற்றும் நேர்மையான எண்ணங்களே ஒருவனுடைய வெற்றிக்கு துணையாகநிற்கிறது. இந்த வெற்றியை அடைய நேர்மறையான சிந்தனையுடனும், சந்தோஷமான மனநிலையுடனும்,அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவ்வாறு மனதை எல்லா நேரமும் தன்னம்பிக்கையுடன் இருக்கபழகிக் கொண்டால், மனமானது சுத்தமாகவும் அதிக ஆக்கத்திறனுடனும் இருக்கும்.   தகவல் : காவிரிமைந்தன்

Read More

* * * பொங்கல் வாழ்த்து * * *

* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும் மஞ்சள் தங்கிய முகமும் வண்ணத் . . தடம்பணைத் தோளும் கொண்ட மங்கையர் கைபார்த் துண்ண . . மலர்கவே பொங்கல் நன்னாள். பூச்சிறு மழலை மேனி . . புத்துடை நகைகொண் டாட ஆச்சியர் துணைவர் சேர . . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட பாற்சுவை வழங்குநன் னாள் . . பழந்தமிழ் வளர்த்த […]

Read More

பெண்களும், அரசியல் அதிகாரமும்

WOMEN AND POLITICAL POWER Extract From the Speech of Dr D Purandeswari   The culture, history and religion of India give women an exalted position. Their participation in the freedom struggle and present day democratic politics is quite visible and well recognized. The country’s Constitution, under the Fundamental Rights, guarantees equality of sexes and confers […]

Read More