கோடை ஆரம்பித்து விட்டது சாப்பாடை விட ஒரு டம்ளர் ஜுஸ் அல்லது மோர் குடித்தால் சோர்வில்லாமல் இருக்கும்.
அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்
அத்திபழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பழுத்த அத்திபழம் – 9
காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்
சர்க்கரை – தேவைக்கு
ஐஸ் கட்டிகள் – 10
செய்முறை
1. அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்.
2. அத்தி பழத்தை சுத்தமாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்
3. வெட்டிய பழத்தை தோல் தனியாக வரும் படி உள்ளிருக்கும் பழத்தைமட்டும் ஒரு ஸ்பூனினால் வழித்தெடுக்கவும்.
4. தேவையான பொருட்கள் அனைத்தையும் தயராக வைக்கவும்.
5. பாலை காய்ச்சி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
6. மிக்சியில் ஐஸ் கட்டிகள், பால் சர்க்கரை,தோல் நீக்கிய அத்தி பழங்கள்
அனைத்தையும் சேர்த்து மிக்சியில் 5 நிமிடம் ஓடவிடவும்
7. நல்ல நுரைபொங்க மிக்சியில் அடிக்கவும்.
வித்தியாசமான சுவையில் ரொம்ப சத்தான ஜூஸ் ரெடி.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்
jaleela1970@gmail.com