துபை : துபையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஹபிப் திவான் மாமனார் மீரா முஹைதீன் ( அரக்காசு ) அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழமை மாலை கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்றது.
தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ஜாஹிர் உசேன், அஹ்மது இம்தாதுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது.
மீரா முஹைதீன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
ஏற்புரை நிகழ்த்திய மீரா முஹைதீன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தாயகத்தில் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இப்பணிகளுக்கு தன்னால் இயன்ற ஒத்துழைப்புகளை நல்குவதாக தெரிவித்தார்.
நிகழ்வில் சீனி, ஹபிப் திவான், சாதிக், அனஸ், சையது இப்ராஹிம், ஷார்ஜா ஃபாரூக், ரஷ்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.