திருச்சி – A.முஹம்மது அபூதாஹிர் ,தோஹா ,கத்தர் .
thahiruae@gmail.com
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் தலைவரான போப் பிரான்ஸிஸ் அவர்கள் நாளை பதவி ஏற்க இருக்கிறார் . உலகின் சக்தி வாய்ந்த வெள்ளை மாளிகைக்கே கட்டளையிடும் வெள்ளை அங்கி தரித்த வாட்டிகன் மேற்கு உலகில் வலிமை வாய்ந்ததாகும் .நாம் புதிதாக பதவி ஏற்கும் போப் பிரான்சிஸ் அவர்களை வரவேற்கிறோம் .இயேசுவின் மீது பாசமும்
அவரை இறைத்தூதர் என்று விசுவாசமும் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் கிறிஸ்தவ உலகிற்கு மிகவும் நெருக்கமானது என்பதில் ஐயமில்லை .இந்த தருணத்தில் வாட்டிகன் கவனத்திற்கு சில விஷயங்களை கொண்டு வர விரும்புகிறோம் .
Top of Form
- இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டதாக கூறப் படும் பலஸ்தீன பூமியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் ரத்தங்கள் இன்றும் சிந்தப்படுகிறது .
- இயேசு சிலுவையில்(கிறிஸ்தவ நம்பிக்கைப்படி)அறையப்பட்டார். இன்று துப்பாக்கியால் அவர் பிறந்த பூமியில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள் .
- அப்போது இயேசு வாழ்ந்தது கொடுங்கோலன் ஏரோதுவின் காலம் .இப்போது பாலஸ்தீனில் முஸ்லிம்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பது அவனது வாரிசான யஹுத் பராக் காலத்தில் .
- .கிருஸ்தவர்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் கிருஸ்தவ மக்கள் கொல்லப் பட்டால் கடவுளின் மக்கள் என்று கண்ணீர் விடும் வாட்டிகன் கிறிஸ்துவின் பூமியில் கொல்லப் படும் மக்கள் முஸ்லிம்கள் என்பதாலோ என்னவோ கிஞ்சிற்றும் வாய் திறப்பதே இல்லை .
- மன்னிப்பு ,அன்பு பற்றியே அதிகம் பேசும் வாட்டிகன், வாஷிங்டன் செய்யும் படுகொலைகளை பார்த்து மவுனம் சாதித்து வருகிறது .
- இரண்டாம் உலகப் போருக்கு முன் ஹிட்லர் செய்தப் படுகொலைகளையும் அமெரிக்க ஆட்சியாளர்கள் மிஞ்சி விட்டார்கள் .ஹிரோஷிமா தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை செய்தப் படுகொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல .இதை இதுவரை உருப்படியாக திருச்சபை கண்டித்ததில்லை .தடுக்க முயற்சியும் செய்ததில்லை.
- புதிய போப் அவர்கள் இயேசுவின் சமாதான செய்தியை வாசிப்பதோடு நில்லாமல் இயேசு வசித்த வீதிகளில் – பாலஸ்த்தீனத்தில் சமாதானம் கொண்டு வர பாடு படுவார் எனபது இயேசுவை நேசிக்கும் ,அவரை இறைதூதராக விசுவாசிக்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்பு .
- இயேசு சமாதானத்தை கொண்டு வந்தார் என்றும் ,தாங்கள் கிறிஸ்துவின் சமாதான செய்தியை உலகிற்குப் போதிப்பதாகவும் அதற்க்காகவே பாடுபடுவதாகவும் கூறும் திருச்சபை குறைந்தப் பட்சம் இயேசு பிறந்த பூமியில் சமாதானம் ஏற்ப்படச் செய்தால் அதுவே இயேசுவுக்கு செய்யும் மிகப் பெரும் நன்றியாகும் .
- யூத சமூகம் இயேசு நாதரை வேசியின் மகன் என்றது ,அவரை கள்ளத் தீர்க்கத் தரிசி என்றது ,அவரை கொல்ல முயன்றது .அவரை சிலுவையில் அறைந்தது .(கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப் படி ,முஸ்லிம்கள் இதை நம்புவதில்லை, இஸ்லாமிய நம்பிக்கைப்படி அவர் கொல்லப்படவுமில்லை,சிலுவையில் அறையப் படவுமில்லை ) ஆனால் அவரது அன்னையை தூய்மையானவர் என்றது குர் ஆன் .அவரை இறைதூதர் என்றும் ,அவரின் பிறப்பு தூய்மையானது. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் உணமையானது என்பனவற்றை நம்பிக்கைக் கொள்வதை கட்டாயமாக்கியது இஸ்லாம் .இதனை மறுப்பவர் முஸ்லிமே அல்ல.
- அறியாமையோ, அல்லது முஸ்லிம்களின் மீது அப்படி என்ன வெறுப்போ தெரிய வில்லை ,துரதிர்ஷ்டவசமாக இயேசுவை இகழ்ந்த, அவரின் செய்தியை புறக்கணித்த ,அவரை கொல்ல முயன்ற யூத சமூகத்துடன் நட்புறவு பாராட்டும் கிறிஸ்தவ உலகம் அதற்கு நேர்மாறாக இயேசுவை நேசிக்கும் சமூகத்தை விட்டு தூரமாக இருப்பது இயேசுவுக்கே செய்யும் உண்மையான விசுவாசமாக இருக்குமா ?.
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையின் வாடகையை அவரே செலுத்தினார்.ஏழை மக்களுக்காக தான் பாடுபடப் போவதாக சொன்னார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது .
- வளைகுடா ,ஆப்ரிக்கா ,ஆசிய மற்றும் அவரின் நாடு அமைந்துள்ள தென் அமெரிக்க கண்ட நாடுகளில் கிறிஸ்தவ,முதலாளித்துவ நாடுகள் அமெரிக்கா ,இங்கிலாந்து ,ஜெர்மன் ,பிரான்ஸ் ,இத்தாலி செய்யும் கொள்ளைகளை ,சுரண்டல்களை ,படுகொலைகளை அவர் தடுத்து நிறுத்த பாடுபடுவது சமூகத்தில் அவரின் எளிமை ,கருணை ஆகியவற்றை உண்மையில் பிரதிபலிப்பதாக அமையும்.
- கிறிஸ்தவ திருச்சபை இயேசு முன்னறிவிப்பு செய்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி வந்துள்ள பர்னபாஸ் சுவிசேசம், சாவுக் கடல் சுருள்கள் ஆகியனப் பற்றி நேரடி மனம் திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும் .இதன் மூலம் உண்மைக்கான பாதை மிகவும் நெருக்கமாகும் .
- அது மட்டுமின்றி இயேசுப் பற்றி குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மொழிந்தவை ஆகியவற்றை இதுவரை கிறிஸ்தவ உலகு சரியாக தெரிந்துக் கொள்ளவில்லை .அல்லது தெரிந்துக் கொள்ள முன்வரவில்லை .கிறிஸ்தவ தலைமை பீடம் அதனை தடுத்து வருகிறது .எனவே இஸ்லாத்தின் உண்மையான நெறியை அறிந்துக் கொள்ள விருப்பு வெறுப்பின்றி குர் ஆன் மற்றும் நபி மொழிகளை படிக்க ,பற்றிப் பிடிக்க முன்வரவேண்டும் .
பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது
- “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. குர் ஆன் (5:82)
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.(குர்ஆன் 5 :83)
- மேலும், மர்யமின் குமாரர் இயேசு “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!)” (குர் ஆன் 61:6
- அஹ்மத் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மற்றொரு பெயராகும் .