இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கமுதி பஷீர் அவர்கள் முஸ்லிம் லீக்கின் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு மஹல்லா ஜமாஅத்களை மாநிலமெங்கும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர். மேலும் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் மாநாடு மூலம் உலமாக்காள், பணீயாளர்கள் நல வாரியம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுவதற்கு உழைத்தவர்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
ஜனாஸா இன்று மாலை சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.