எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு,
எம்மா கொடுத்த பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு,
இப்போ வந்து என் வரவை எதிர் பாக்கிறாரு.
எத்தாபேரு ஆண்பிள்ளை,
எங்க அம்மா பெயர் பொம்பளை,
இப்போ … என் பெயர் மாப்பிள்ளை,
மாப்பிள்ளை நான் ஆனதாலே மதிப்பு ஏறி போச்சு,
முக்கியம்மா நாலுபேரு மதிப்பு போடலாச்சி …
அரபு நாடு போய் வந்துட்டேன் அதுவும் பெரிய பேச்சு,
அங்கே இங்கே தேட வேண்டாம் தானா வருது காசு,
காசுக்கு என்னை விக்காதீங்க என்று சொல்லிப் பார்த்தேன்
காலமெல்லாம் கெட்டப்பெயர்னு நல்லா சொல்லிப் பார்த்தேன்
உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எம்மா சொல்லுறாங்க,
இந்த ஒன்னும் தெரியா மாப்பிள்ளைக்கா இவ்வளவு ரேட்டு
எம்மே (M.A) படிச்ச மாப்பிளேன்னு எத்தா சொல்லுறாரு
எம்மாம் பெரிய படிப்புன்னு ரேட்டை ஏத்துறாரு,
படிச்ச நானு பணம் பறிச்சா புத்திசாலி யாரு,
பின்பு வரும் கண்ணீரை துடைப்பது யாரு,
பெண்ணுக்கு மஹர் கொடுக்க சொல்லி மார்க்கம் சொல்லுது
ஆண் எனக்கு மஹர் கொடுக்க யார் சொன்னது,
மண்ணுக்கு நீங்க பாரமாக வந்தா சேர்ந்தீங்க,
பெண் இனத்தை கொஞ்சமாச்சும் வாழ விடுங்க.
நன்றி : நர்கிஸ் – ஜுன் 2011